டி-20 சரவெடி...இந்தியா ரெடி * இன்று ஆஸி.,யுடன் முதல் மோதல்
கான்பெரா: முதல் 'டி-20' போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளாச வேண்டுமென, இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடக்க உள்ளது. சரியும் சராசரி'டி-20' உலக சாம்பியனான இந்திய அணி, சூர்யகுமார் தலைமையில் களமிறங்குகிறது. கேப்டனாக 29 போட்டிகளில் 23ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறார். 'மிஸ்டர் 360 டிகிரி' என போற்றப்படும் இவர், மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசும் திறன் பெற்றவர். 2023ல் 18 போட்டியில் 2 சதம், 5 அரைசதம் உட்பட 733 ரன் (ஸ்டிரைக் ரேட் 155.95) குவித்தார். 2024ல் 18 போட்டியில் 429 ரன் (ஸ்டிரைக் ரேட் 151.59) எடுத்தார். சமீப காலமாக தடுமாறுகிறார். 2025ல் 12 போட்டியில் 100 ரன் (சராசரி 11.11, ஸ்டிரைக் ரேட் 105.26) தான் எடுத்துள்ளார். இன்று இவர் எழுச்சி கண்டால், 'டி-20' அரங்கின் 'நம்பர்-1' அணியான இந்தியா, வெற்றியுடன் தொடரை துவக்கலாம்.வருகிறார் பும்ராபேட்டிங்கில் அசத்த அபிஷேக் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், திலக் வர்மா, சாம்சன், ரிங்கு சிங், 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் உள்ளனர். ஷிவம் துபே அல்லது ஹர்ஷித் ராணா இடம் பெறலாம். பந்துவீச்சில் 'வேகப்புயல்' பும்ரா வரவு கூடுதல் பலம். இவருக்கு பக்கபலமாக அர்ஷ்தீப் சிங் உள்ளார். வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் என 4 'ஸ்பின்னர்'களிடம் ஆஸ்திரேலிய அணி திணறுவது நிச்சயம். சூர்யகுமார் கூறுகையில்,''பவர்-பிளே ஓவரில் சிறப்பாக செயல்படுவது முக்கியம். ஒரு 'வேகம்', ஒரு 'ஆல்-ரவுண்டர்', 3 'ஸ்பின்னர்கள்' இடம் பெறுவர். 'டாப்-7' வீரர்கள் பேட்டிங் செய்வதில் வல்லவர்களாக உள்ளனர். திறமைக்கு பஞ்சம் இல்லாததால், விளையாடும் 'லெவனை' தேர்வு செய்வது கடினமாக உள்ளது,''என்றார்.ஹெட் பலம்'டி-20' அரங்கில் 'நம்பர்-2' அணியான ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் நம்பிக்கை தருகிறார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற உற்சாகத்தில் உள்ளார். துவக்கத்தில் டிராவிஸ் ஹெட் மிரட்டலாம். ஸ்டாய்னிஸ், மிட்சல் ஓவன், இங்லிஸ், ஜோஷ் பிலிப் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் அனுபவ ஹேசல்வுட், அபாட் கைகொடுக்கலாம். ஆடுகளம் எப்படிமனுகா ஓவல் மைதான ஆடுகளம் மந்தமாக இருக்கும். பந்துவீச்சுக்கு சாதகமானது. 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம். மழை வருமாகான்பெராவில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை. யார் ஆதிக்கம்'டி-20' அரங்கில் இரு அணிகளும் 32 முறை மோதின. இந்தியா 20, ஆஸ்திரேலியா 11ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. * ஆஸ்திரேலிய மண்ணில் 12 முறை மோதின. இந்தியா 7, ஆஸ்திரேலியா 4ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.