உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / புதிய கேப்டன் மந்தனா * இந்திய அணி அறிவிப்பு

புதிய கேப்டன் மந்தனா * இந்திய அணி அறிவிப்பு

புதுடில்லி: இந்தியா வரவுள்ள அயர்லாந்து பெண்கள் அணி, 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. போட்டி அனைத்தும் ராஜ்கோட்டில் ஜன. 10, 12, 15ல் நடக்கும். போட்டி காலை 11:00 மணிக்கு துவங்கும். இதற்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது. 'ரெகுலர்' கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு 35, ஓய்வு தரப்பட்டது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 28, கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகாவுக்கும் ஓய்வு தரப்பட்டது. அணி விபரம்:ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா, பிரதிகா, ஹர்லீன், ஜெமிமா, உமா, ரிச்சா, தேஜல், ராகவி, மின்னு மானி, பிரியா, தனுஜா, திதாஸ், சைமா, சயாலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !