உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வரும் முன் காப்போம் * கிளார்க் அட்வைஸ்

வரும் முன் காப்போம் * கிளார்க் அட்வைஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 44. கடந்த 2015ல் இவரது தலைமையிலான அணி, உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. இதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது இவர் தோல் புற்றுநோய் ('கேன்சர்') பாதிப்பால் அவதிப்படுவது தெரியவந்துள்ளது. கடந்த 2006ல் முதன் முதலில் இது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டார். 2019ல் இவரது முன் தலை உட்பட 3 பகுதியில் இருந்து கேன்சர் அல்லாத திசுக்கள் அகற்றப்பட்டன. 2023ல் மார்புப் பகுதியில் இருந்த தோல் நீக்கப்பட்ட போது, 27 தையல் போடப்பட்டன. தற்போது ஆறாவது முறையாக மூக்கில் இருந்த கேன்சர் தோலை அகற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,' ஆஸ்திரேலியாவில் தோல் கேன்சர் என்பது தீவிரமான பிரச்னையாக உள்ளது. தற்போது மீண்டும் மூக்கில் ஆப்பரேஷன் செய்துள்ளேன். தயவு செய்து உங்கள் தோல் குறித்து அடிக்கடி சோதனை செய்யுங்கள். வரும் முன் காப்பதே சிறந்தது. எனது விஷயத்தில் முன்னதாக கண்டறிந்ததால், மீண்டுள்ளேன்,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை