மேலும் செய்திகள்
ரஞ்சி கோப்பை: தமிழகம் தடுமாற்றம்
16-Oct-2025
கோவை: ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி, 114 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நடக்கிறது. கோவையில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் அணி 419, தமிழகம் 93 ரன் எடுத்தன. 'பாலோ ஆன்' பெற்ற தமிழக அணி, மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 52/3 ரன் எடுத்து, 274 ரன் பின்தங்கி இருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஜெகநாதன் (2), பாபா இந்திரஜித் (22) நிலைக்கவில்லை. ஷாருக்கான் 37 ரன் எடுத்தார். போராடிய சித்தார்த், 80 ரன்னில் அவுட்டானார். தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. இன்னிங்ஸ், 114 ரன்னில் தோல்வியடைந்தது. ரிஷாவ் ராஜ் 4, அனுகுல் 3 விக்கெட் சாய்த்தனர்.தப்பியது சவுராஷ்டிராகுஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் கர்நாடகா (372, 232), சவுராஷ்டிரா அணிகள் (376) மோதின. இரண்டாவது இன்னிங்சில் 229 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சவுராஷ்டிரா, ஒரு கட்டத்தில் 43/4 என திணறியது. பின் சம்மர் (43), கோஹில் (41) கைகொடுக்க, ஆட்ட முடிவில் 128/5 ரன் எடுத்து, போட்டியை 'டிரா' செய்தது.காஷ்மீரில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் மும்பை அணி (386, 181), காஷ்மீர் அணியை (325, 207) 35 ரன்னில் வீழ்த்தியது. திருவனந்தபுரத்தில் நடந்த ('பி' பிரிவு) மகாராஷ்டிரா (239, 224/2), கேரளா (219) அணிகள் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
16-Oct-2025