உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோலி, ருதுராஜ் சதம் வீண் * 359 ரன் சேஸ் செய்தது தென் ஆப்ரிக்கா * இந்திய பவுலர்கள் ஏமாற்றம்

கோலி, ருதுராஜ் சதம் வீண் * 359 ரன் சேஸ் செய்தது தென் ஆப்ரிக்கா * இந்திய பவுலர்கள் ஏமாற்றம்

ராய்ப்பூர்: பவுலர்கள் ஏமாற்ற, இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி, 4 விக்கெட்டில் தோல்வியடைந்தது. கோலி, ருதுராஜ் சதம் வீணானது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடந்தது. மீண்டும் தென் ஆப்ரிக்க அணி கேப்டனாக களமிறங்கிய பவுமா, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார். சூப்பர் ஜோடிஇந்திய அணிக்கு ரோகித் சர்மா (14), ஜெய்ஸ்வால் (22) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ருதுராஜ். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் 52 பந்தில் அரைசதம் எட்டினார். இதன் பின் இவர், வேகமாக ரன் சேர்த்தார். மஹாராஜ் ஓவரில் 4, 2, 6, 4 என விளாச, 16 ரன் கிடைத்தன. கோலி 67 ரன்னில் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை, யான்சென், ஜோர்ஜி கோட்டை விட்டனர். மறுபக்கம் பாஷ் ஓவரில் (34), அடுத்தடுத்து பவுண்டரி அடித்த ருதுராஜ், 77 பந்தில் சதம் அடித்தார். ஒருநாள் அரங்கில் இவரது முதல் சதம் இது. கோலி சதம்மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்த போது, ருதுராஜ் (105), யான்சென் 'பவுன்சரில்' அவுட்டாகினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோலி, ஒருநாள் அரங்கில் 53வது சதம் எட்டினார். இவர் 102 ரன் எடுத்த போது, லுங்கிடி பந்தில் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் (1) ரன் அவுட்டானார். யான்சென் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராகுல், இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது அரைசதம் எட்டினார். பாஷ் வீசிய கடைசி ஓவரில் 18 ரன் எடுக்கப்பட்டன. இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 358 ரன் குவித்தது. ராகுல் (66), ஜடேஜா (24) அவுட்டாகாமல் இருந்தனர். மார்க்ரம் ரன்குவிப்புதென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம், குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் வேகத்தில் குயின்டன் (8) சிக்கினார். 53 ரன் எடுத்த போது, குல்தீப் பந்தில் (17.2 ஓவர்), மார்க்ரம் கொடுத்த கேட்ச்சை, பவுண்டரி எல்லையில் ஜெய்ஸ்வால் கோட்டை விட, சிக்சர் ஆனது. பிரசித் 'வேகத்தில்' பவுமா (46) வெளியேறினார். மறுபக்கம், 88 பந்தில் சதம் எட்டிய மார்க்ரம், 110 ரன்னில், ஹர்ஷித் பந்தில் அவுட்டானார். பிரவிஸ் 54, பிரீட்ஸ்கி 68 ரன் எடுத்து கைகொடுத்தனர். யான்சென் (2) ஏமாற்றினார். தொடை பின்பகுதி காயத்தால் ஜோர்ஜி (17) 'ரிட்டயர்டு ஹர்ட்' ஆனார். தவிர இந்திய வீரர்களின் பவுலிங், பீல்டிங் சுமாராக அமைய, தென் ஆப்ரிக்கா வெற்றியை நெருங்கியது. முடிவில் தென் ஆப்ரிக்க அணி 49.2 ஓவரில் 362/6 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. மஹாராஜ் (10), பாஷ் (29) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர் 1-1 என சமனில் உள்ளது. சிறந்த 'சேஸ்'இந்திய மண்ணில் சிறந்த 'சேஸ்' செய்த எதிரணிகளில், முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது தென் ஆப்ரிக்கா (359/6). முன்னதாக 2019ல் இந்தியாவின் (358/9, மொகாலி) இலக்கை, 'சேஸ்' செய்து வென்றது ஆஸ்திரேலியா (359/6). * தென் ஆப்ரிக்க அணி நேற்று 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒருநாள் அரங்கில் சிறந்த 'சேஸ்' வரிசையில் இது 3வது இடம் பெற்றது. முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா (438/9, எதிர்-ஆஸி., 434/4, 2006), 2வது இடத்தில் நெதர்லாந்து (374/6, எதிர்-ஸ்காட்லாந்து, 369/6, 2025) அணிகள் உள்ளன.195 ரன்தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடி என கோலி-ருதுராஜ் பெருமை பெற்றனர். நேற்று இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்தது. முன்னதாக சச்சின்-தினேஷ் கார்த்திக் இணைந்து 2010ல் 2வது விக்கெட்டுக்கு 194 ரன் சேர்த்து இருந்தனர். ராசியில்லா 'டாஸ்'கடந்த 2023, உலக கோப்பை பைனல் முதல், நேற்று வரை என, ஒருநாள் அரங்கில் இந்திய அணி தொடர்ந்து 20 வது முறையாக 'டாஸ்' வெல்ல தவறியது. 11 முறைகோலி (135, 102 ரன்) தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த நிகழ்வு, 11 வது முறையாக நேற்று நடந்தது. இவ்வரிசையில் டிவிலியர்ஸ் (6, தெ.ஆப்.,) 2வதாக உள்ளார். * தொடர்ந்து மூன்று முறை 50 அல்லது அதற்கும் மேல் என கோலி (74, 135, 102), 13வது முறையாக ரன் எடுத்தார். ரோகித் (11), சச்சின் (10) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டியிலும் சதம் விளாசினார் கோலி. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 101, இம்முறை 135, 102 ரன் எடுத்தார்.53 வது சதம்ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்தவர் வீரர்களில் முதலிடத்தில் நீடிக்கிறார் கோலி (53 சதம்/307 போட்டி). இந்தியாவின் சச்சின் (49 சதம்/ 463 போட்டி), ரோகித் சர்மா (33/277), பாண்டிங் (ஆஸி., 30/375) அடுத்து உள்ளனர். * மூன்றுவித கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிக சதம் அடித்தவர் பட்டியலில் சச்சினுக்கு(100) அடுத்து 2வது இடத்தில் உள்ளார் கோலி (84).* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவரானார் கோலி (7). அடுத்த இடத்தில் ( தலா 5 சதம்) சச்சின், வார்னர் (ஆஸி.,) உள்ளனர். 77 பந்துதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடம் பெற்றார் ருதுராஜ் (77 பந்து). முதலிடத்தில் யூசுப் பதான் (2011, 68 பந்து) உள்ளார்.2வது அதிகம்ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நேற்று இந்தியா தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (358/5) பதிவு செய்தது. முதலிடத்தில் 401/3 ரன் (குவாலியர், 2010) உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி