உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஜொலித்த ஜெய்ஸ்வால் முதல் சதம் * மூன்றாவது போட்டியில் வெற்றி * கோப்பை வென்றது இந்தியா

ஜொலித்த ஜெய்ஸ்வால் முதல் சதம் * மூன்றாவது போட்டியில் வெற்றி * கோப்பை வென்றது இந்தியா

விசாகப்பட்டினம்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் விளாச, இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் சவாலில் இந்தியா, இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றன. வாஷிங்டன் நீக்கம்முக்கியமான மூன்றாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, திலக் வர்மா வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற இந்தியா சாமர்த்தியமாக 'பவுலிங்' தேர்வு செய்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் ரிக்கிள்டன் (0) அவுட்டானார். பின் கேப்டன் பவுமா- குயின்டன் டி காக் 2வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தனர். ஜடேஜா 'சுழலில்' பவுமா (48) சிக்கினார். திலக் வர்மா ஓவரில் பிரீட்ஸ்கி வரிசையாக 2 சிக்சர் விளாச, தென் ஆப்ரிக்கா 28 ஓவரில் 167/2 என வலுவாக இருந்தது. கிருஷ்ணா திருப்பம்இந்த நேரத்தில் 29வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா அற்புதம் நிகழ்த்தினார். 2வது பந்தில் பிரீட்ஸ்கி (24), 6வது பந்தில் மார்க்ரமை (1) அவுட்டாக்கினார். ஹர்ஷித் ராணா பந்தை சிக்சருக்கு அனுப்பிய குயின்டன், 80 பந்தில் சதம் எட்டினார். தொடர்ந்து மிரட்டிய கிருஷ்ணா 'வேகத்தில்' குயின்டன் (106 ரன், 8x4, 6x6) வெளியேற, இந்தியாவுக்கு நிம்மதி பிறந்தது. 3 விக்கெட்டுகளை விரைவாக இழக்க, 33 ஓவரில் 199/5 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. குல்தீப் 'மேஜிக்'கடைசி கட்டத்தில் குல்தீப் யாதவ் அசத்தினார். இவரது 'சுழல்' புயலில் பிரவிஸ் (29), யான்சென் (17), பாஷ் (9) நடையை கட்டினர். தென் ஆப்ரிக்க அணி 47.5 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மஹாராஜ் (20) அவுட்டாகாமல் இருந்தார்.இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, குல்தீப் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.ரோகித் அரைசதம்சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் கலக்கல் துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்தனர். இருவரும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்ய, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. ரோகித் 54 பந்தில், ஒருநாள் அரங்கில் தனது 61வது அரைசதம் எட்டினார். இவர், 75 ரன்னுக்கு (7X4, 3X6) அவுட்டானார். பின் அனுபவ கோலி 'கம்பெனி' கொடுக்க, அபார ஆட்டத்தை தொடர்ந்தார் இளம் ஜெய்ஸ்வால். 111 பந்தில் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதம் எட்டி மகிழ்ந்தார். 40 பந்தில் கோலி அரைசதம் எட்டினார். நிகிடி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி சுலப வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 39.5 ஓவரில் 271/1 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் (116, 12X4, 2X6), கோலி (65, 6x4, 3x6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால், தொடர் நாயகனாக கோலி (302 ரன்) தேர்வு செய்யப்பட்டனர்.குயின்டன் முதலிடம்குயின்டன் டி காக் நேற்று ஒருநாள் அரங்கில் 23வது சதம் அடித்தார். இது இந்தியாவுக்கு எதிராக 7வது சதம். ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் (7, எதிர், இந்தியா) அடித்த விக்கெட் கீப்பரில் முதலிடத்திற்கு முன்னேறினார். அடுத்த இடத்தை தலா 6 சதத்துடன் கில்கிறிஸ்ட்(ஆஸி., எதிர், இலங்கை), சங்ககரா (இலங்கை, எதிர், இந்தியா) பகிர்ந்து கொண்டுள்ளனர்.* விக்கெட் கீப்பராக அதிக சதம் அடித்தவரில் முதலிடத்தை சங்ககராவுடன் பகிர்ந்து கொண்டார் குயின்டன் (தலா 23 சதம்).* இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரில் முதலிடத்தை (தலா 7 சதம்) ஜெயசூர்யாவுடன் (இலங்கை, 85 இன்னிங்ஸ்) பகிர்ந்து கொண்டார் குயின்டன் (23 இன்னிங்ஸ்).* அன்னிய மண்ணில் அதிக சதம் அடித்தவரில் முதலிடத்தை (தலா 7 சதம்) இந்தியாவின் சச்சின் (யு.ஏ.இ.,ல்), பாகிஸ்தானின் அன்வர் (யு.ஏ.இ.,ல்), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (இந்தியாவில்), இந்தியாவின் ரோகித் சர்மாவுடன் (இங்கிலாந்தில்) பகிர்ந்து கொண்டார் குயின்டன் (இந்தியாவில்).5வது முறைஒருநாள் அரங்கில் அதிக முறை 4 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில் குல்தீப் 3வது இடம் (11 முறை) பெற்றார். முதல் இரு இடங்களில் ஷமி(16), அகார்கர் (12) உள்ளனர்.* ராசியான விசாகப்பட்டினத்தில் 5 போட்டியில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் குல்தீப். * ஒரு நாள் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை 4 விக்கெட் சாய்த்த இந்திய பவுலரானார் குல்தீப் (5 முறை, எதிர், தென் ஆப்ரிக்கா). அடுத்த இடத்தில் (தலா 4 முறை) ஜாகிர் கான் (எதிர், ஜிம்பாப்வே), ஷமி (எதிர், வெ.இண்டீஸ்) உள்ளனர்.கோலி-குல்தீப் நடனம்குல்தீப் யாதவ் 'சுழலில்' பாஷ் அவுட்டானார். இம்மகிழ்ச்சியை குல்தீப் உடன் ஜோடியாக கை கோர்த்து நடனமாடி மகிழ்ந்தார் கோலி. இதே போல பவுமா கொடுத்த 'கேட்ச்சை' பிடித்ததும் அவரை போல நடந்து ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார் கோலி. * கடைசி கட்டத்தில் தென் ஆப்ரிக்க 'டெயிலெண்டர்களுக்கு' எதிராக தொடர்ந்து எல்.பி.டபிள்யு., கேட்டார் குல்தீப். 'ரிவியு' செய்யும்படி கேப்டன் ராகுலிடம் நச்சரித்தார். ராகுல் சிரித்தார். உடனே தலையிட்ட ரோகித் 'கால் பேடில் எல்லாம் பந்து படவில்லை. போய் பந்துவீசு' என குல்தீப்பிற்கு கட்டளையிட்டார். ராகுல் 'டாஸ்' ராசிஒருநாள் போட்டியில் தொடர்ந்து 20 'டாசில்' தோற்ற இந்திய அணி, நேற்று ஒருவழியாக வென்றது. வலது கை பேட்டரான கேப்டன் ராகுல் இம்முறை இடது கையில் 'காயினை' சுண்டிவிட்டார். இந்த யுக்தி கைகொடுக்க, இந்தியாவுக்கு எல்லாம் சாதகமாக அமைந்தது. 6வது வீரர்ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்தார் ஜெய்ஸ்வால், 23. மூன்றுவித கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய 6வது இந்திய வீரரானார். இதற்கு முன் ரெய்னா, ரோகித், ராகுல், கோலி, சுப்மன் கில் இம்மைல்கல்லை எட்டினர். ஜெய்ஸ்வால் டெஸ்டில் 7 சதம், 'டி-20', ஒருநாள் போட்டியில் தலா ஒரு சதம் அடித்துள்ளார். 20,000 ரன்நேற்று 75 ரன் விளாசிய ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன் (505 போட்டி) எட்டிய நான்காவது இந்திய வீரரானார். முதல் 3 இடங்களில் சச்சின் (664 போட்டி, 34,357), கோலி (556 போட்டி, 27,910 ரன்), டிராவிட் (504 போட்டி, 24,064 ரன்) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை