தொடரை வென்றது இந்திய அணி * அரைசதம் விளாசினார் ஷைபாலி
திருவனந்தபுரம்: இந்திய பெண்கள் அணி, 'ஹாட்ரிக்' வெற்றியுடன், 'டி-20' தொடரை 3-0 என கைப்பற்றியது. ஷைபாலி வர்மா 79 ரன் விளாசினார்.இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி நேற்று திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மீண்டும் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் அருந்ததி, ஸ்னே ராணாவுக்குப் பதில் தீப்தி சர்மா, ரேணுகா சேர்க்கப்பட்டனர்.சரிந்த விக்கெட்இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி, ஹாசினி ஜோடி துவக்கம் கொடுத்தது. சமாரி 3 ரன் எடுத்து, தீப்தி பந்தில் வீழ்ந்தார். 18 பந்தில் 25 ரன் எடுத்த ஹாசினி, ரேணுகா 'வேகத்தில்' சரிந்தார். இதன் பின் இலங்கை வீராங்கனைகள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஹர்ஷித்தா (2), நிலாக்சிகா (2) நிலைக்கவில்லை. கவிஷா 20 ரன் எடுத்தார். இமேஷா (27) சற்று உதவினார். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 117 ரன் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் ரேணுகா 4, தீப்தி 3 விக்கெட் சாய்த்தனர்.ஷைபாலி அபாரம்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷைபாலி, ஸ்மிருதி ஜோடி வேகமான துவக்கம் தந்தது. ஸ்மிருதி (1) அவுட்டான போதும், ஷைபாலி, 24 பந்தில் அரைசதம் விளாசினார். ஜெமிமா 9 ரன்னில் திரும்பினார். கடைசியில் ஷைபாலி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 13.2 ஓவரில் 115/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஷைபாலி (79 ரன், 42 பந்து), ஹர்மன்பிரீத் கவுர் (21) அவுட்டாகாமல் இருந்தனர். நான்காவது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. 333 விக்கெட்சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் மூன்று வித போட்டிகளில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் தீப்தி சர்மா. இவர், டெஸ்டில் 20 (5 போட்டி), ஒருநாள் அரங்கில் 162 (121ல்), 'டி-20'ல் 151 (131ல்) என மொத்தம் 333 விக்கெட் சாய்த்துள்ளார். முதலிடத்தை ஜுலன் கோஸ்வாமி (335), இங்கிலாந்தின் கேத்தரின் ஷிவர் பிரன்ட் (335) பகிர்ந்து கொண்டுள்ளனர். எல்லிஸ் பெர்ரி (331, ஆஸி.,) 3வதாக உள்ளார்.