உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நான்காவது வெற்றி நோக்கி இந்தியா * இன்று இலங்கையுடன் மீண்டும் மோதல்

நான்காவது வெற்றி நோக்கி இந்தியா * இன்று இலங்கையுடன் மீண்டும் மோதல்

திருவனந்தபுரம்: இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும் நான்காவது 'டி-20' போட்டி இன்று நடக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில் இந்தியா, தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்யலாம். இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி இன்று திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடக்கிறது.பேட்டிங்கில் துவக்கத்தில் ஷைபாலி (157 ரன்), ஜெமிமா (104) கைகொடுக்கின்றனர். சீனியர்' ஸ்மிருதி மந்தனா, 3 போட்டியில் 40 ரன் (சராசரி 13.33) மட்டும் எடுத்துள்ளார். இன்று மீண்டு வந்தால் நல்லது. தவிர, தொடரை வென்று விட்டதால் இன்று கமலினி, அமன்ஜோத் கவுருக்கு வாய்ப்பு தரப்படலாம். தீப்தி அபாரம்பந்துவீச்சை பொறுத்தவரையில் தீப்தி (4), ரேணுகா (4) என சீனியர்களுகம், இளம் பவுலர்கள் ஸ்ரீசரணி (3 விக்.,), வைஷ்ணவி (2), கிராந்தி (2) என ஜூனியர்களும் சிறப்பாக செயல்படுவதால், வெற்றி எளிதாகிறது. மீள முடியுமாமுதல் 3 போட்டியில் முதலில் களமிறங்கிய போதும் இலங்கை அணி 121, 128, 112 என மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. கேப்டன் சமாரி, ஹாசினி, கவுஷினி, கவிஷா என பல திறமையான பேட்டர்கள் இருந்த போதும், பெரியளவு ஸ்கோர் எடுக்க முடியாமல் இலங்கை அணி தவிக்கிறது. பந்து வீச்சிலும் சொல்லிக் கொள்ளும் படி செயல்படவில்லை. முதல் 3 போட்டியில் 7 விக்கெட் தான் (2+3+2) வீழ்த்த முடிந்தது. மற்றபடி, கவிஷா (3) மட்டும் ஆறுதல் தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை