உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / எளிதாக வென்றது நியூசி., * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்

எளிதாக வென்றது நியூசி., * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்

கயானா: இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது போட்டி கயானாவில் நடந்தது. ‛டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி ‛பீல்டிங்' தேர்வு செய்தது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான் கேம்ப்பெல் (43) நல்ல துவக்கம் தந்தார். அக்கீம் அகஸ்டே (18), கீசி கார்டி (18) நிலைக்கவில்லை. கேப்டன் ஷாய் ஹோப் (7), ஷெர்பேன் ரூதர்போர்டு (8) ஏமாற்றினர். அமிர் ஜங்கோ (24) ஆறுதல் தந்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ஓவரில் 138 ரன்னுக்கு ‛ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் ‛சுழலில்' அசத்திய ஜேடன் லெனாக்ஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு ஹென்றி நிக்கோல்ஸ் (17), வில் யங் (28) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. டேரில் மிட்செல் (28), டாம் லதாம் (37*), மைக்கேல் பிரேஸ்வெல் (24*) கைகொடுக்க, நியூசிலாந்து அணி 32.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !