ரஞ்சி கோப்பை: தமிழகம் ஏமாற்றம்
ஜாம்ஷெட்பூர்: ரஞ்சி கோப்பை தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் தமிழக அணி, 44 ரன்னில் தோல்வியடைந்தது. இந்தியாவில், ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் 185, தமிழகம் 106 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஜார்க்கண்ட் 154 ரன் எடுத்தது. பின், 234 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தமிழக அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 2வது இன்னிங்சில் 137/5 ரன் எடுத்திருந்தது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அஜித் ராம் (5), விஜய் சங்கர் (33) முதல் நாள் ஸ்கோருடன் அவுட்டாகினர். முகமது 35 ரன் எடுத்தார். தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, இத்தொடரில் முதன் முறையாக தோற்றது. காலிறுதியில் யார்ராய்ப்பூரில் நடக்கும் 'டி' பிரிவின் மற்றொரு போட்டியில் 19 புள்ளி பெற்ற சண்டிகார் (283/10, 211/4), 11 புள்ளி எடுத்துள்ள சத்தீஷ்கர் (406/10) மோதுகின்றன. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இதில் சண்டிகர் வெற்றி பெற்றால் 25 புள்ளி பெறும். தற்போது சவுராஷ்டிரா (25 புள்ளி), தமிழகம் (25) 'டாப்-2' ஆக உள்ளன. இதனால் ரன் ரேட் அடிப்படையில் முதல் இரு இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு செல்லும்.கோலியை காண...டில்லியில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் டில்லி (374), ரயில்வேசை (241, 114), இன்னிங்ஸ், 19 ரன்னில் வென்றது. இதில் டில்லி அணிக்காக, 13 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் கோலி விளையாடினார். நேற்று மதிய உணவு இடைவேளைக்கு முன், பலத்த பாதுகாப்பை மீறி, 3 ரசிகர்கள் மைதானத்தில் புகுந்து, கோலியை அருகில் காணச் சென்றனர். பின் தனியார் பாதுகாவலர்கள் ரசிகர்களை பிடித்துச் சென்றனர். அப்போது கோலி,' அவர்களை அடிக்க வேண்டாம்,' என வேண்டுகோள் விடுத்தார்.