தமிழக அணி டிரா * விஜய் சங்கர் சதம்
கோவை: சத்தீஷ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியை தமிழக அணி 'டிரா' செய்தது.இந்தியாவில் ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோவையில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் சத்தீஸ்கர் 500, தமிழக அணி 259 ரன் எடுத்தன. இதையடுத்து 'பாலோ-ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது தமிழகம். மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி 71/1 ரன் எடுத்திருந்தது.சங்கர் சதம்நேற்று நான்காவது கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சித்தார்த் 41 ரன் எடுத்தார். கேப்டன் ஜெகதீசன் (60) அரைசதம் அடித்தார். பூபதி (8) ஏமாற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஜய் சங்கர், முதல் தர கிரிக்கெட்டில் 10வது சதம் கடந்தார்.தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 264/4 ரன் எடுத்திருந்த போது, போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. விஜய் சங்கர் (106), பிரதோஷ் (39) அவுட்டாகாமல் இருந்தனர். இதுவரை நடந்த 3 போட்டி முடிவில் தமிழக அணி 1 வெற்றி, 2 'டிரா' செய்து 10 புள்ளியுடன் பட்டியலில் 4வதாக உள்ளது.68 பந்தில்...இந்துாரில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 308, ஹரியானா 440 ரன் எடுத்தன. அடுத்து மத்திய பிரதேசம் ரஜத் படிதர் (159 ரன், 102 பந்து), 68 பந்தில் சதம் விளாசினார். ரஞ்சி கோப்பை அரங்கில் ரிஷாப் பன்ட் (48 பந்து, 2016/17), ரியான் பராக் (56, 2023/24), போரா (56 பந்து, 1987/88), ரியுபெனுக்கு (60, 1995/96) அடுத்து குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் ஆனார் ரஜத். பின் மத்திய பிரதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 308/4 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பின் ஹரியானா 115/3 ரன் எடுத்த போது போட்டி 'டிரா' ஆனது.