வாசகர்கள் கருத்துகள் ( 1 )
My elevan for english tour. Bumrahcap. Jaishwal, Gill,Suresh Iyer, Ragul, Pantvc Kuldip, Sami, Hardipsigh, Krishna, and Jadaija.
புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக பும்ராவை நியமிக்க வேண்டுமென முன்னாள் தேர்வுக்குழுவினர் வலியுறுத்தினர். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20-ஆக.4) பங்கேற்கிறது. டெஸ்டில் இருந்து அனுபவ ரோகித், கோலி ஓய்வு பெற்ற நிலையில், புதிய கேப்டனாக இளம் சுப்மன் கில், துணை கேப்டனாக ரிஷாப் பன்ட் நியமிக்கப்படலாம். இருப்பினும் 'வேகப்புயல்' பும்ராவை மீண்டும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில், முதல் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் இல்லாத சூழலில், கேப்டன் பொறுப்பை ஏற்ற பும்ரா, வெற்றி தேடித் தந்தார். அடிக்கடி காயம் அடைவது இவரது பலவீனமாக உள்ளது. ராகுல் வாய்ப்புஇது பற்றி இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில்,''தலைமைபண்பில் ஏற்கனவே திறமை நிரூபித்தவர் பும்ரா. இவரை இங்கிலாந்து தொடருக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். துணை கேப்டன் பதவியை சுப்மன் கில்லுக்கு கொடுக்கலாம். பும்ராவின் உடற்தகுதியில் பிரச்னை இருந்தால், கே.எல். ராகுலை கேப்டனாக நியமிக்கலாம். இங்கிலாந்து மண்ணில் நிதிஷ் குமார் பந்துவீச்சு எடுபடும். இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கலாம். 'பேட்டிங்' வரிசையில் நான்காவது இடத்தில் ராகுல் களமிறங்கலாம். துவக்கத்தில் ஜெய்ஸ்வால், சுதர்சன் வரலாம். 'ரிசர்வ் ஓபனராக' அபிமன்யு ஈஸ்வரனை தேர்வு செய்யலாம். 'சுழலில்' குல்தீப் வாய்ப்பு பெறுவது உறுதி,''என்றார்.வருவாரா ஷ்ரேயஸ் இந்திய முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் தேவாங் காந்தி கூறுகையில்,''பிரிமியர் தொடரில் ஷமியின் பந்துவீச்சு எடுபடவில்லை. இதன் அடிப்படையில், டெஸ்ட் அணி தேர்வு அமைய கூடாது. இங்கிலாந்து தொடரில் ஷமியை போன்ற திறமையான பவுலர் அவசியம். கேப்டனாக பும்ராவை நியமிப்பதே சிறந்த முடிவாக இருக்கும். துணை கேப்டனாக ரிஷாப் பன்ட்டை நியமிக்கலாம். பேட்டிங் நுணுக்கத்தில் கைதேர்ந்த ஷ்ரேயஸ், விளையாடும் லெவனில் இடம் பெற வேண்டும்,''என்றார்.
My elevan for english tour. Bumrahcap. Jaishwal, Gill,Suresh Iyer, Ragul, Pantvc Kuldip, Sami, Hardipsigh, Krishna, and Jadaija.