உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா * இரண்டாவது டெஸ்டில் வெற்றி

கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா * இரண்டாவது டெஸ்டில் வெற்றி

புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான புலவாயோ டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, 2-0 என தொடரை வசப்படுத்தி, கோப்பை கைப்பற்றியது. ஜிம்பாப்வே சென்ற தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி புலவாயோவில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 626/5 ரன் குவித்தது. கேப்டன் முல்டர் முச்சதம் ('டிரிபிள்') அடித்தார். வெஸ்ட் இண்டீசின் லாரா (400 ரன், 2004, எதிர்-இங்கிலாந்து) சாதனையை தகர்ப்பார் என நம்பப்பட்டது. மாறாக, லாராவுக்கு மரியாதை தரும் வகையில் முல்டர் 367 ரன் (334 பந்து) எடுத்த நிலையில் 'டிக்ளேர்' செய்தார். பின், முதல் இன்னிங்சில் 170 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே, 'பாலோ ஆன்' பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி 2வது நாள் முடிவில் 51/1 ரன் எடுத்து, இன்னிங்ஸ், 405 ரன் பின்தங்கி இருந்தது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. கைட்டனோ (40), நிக் வெல்ச் (55), 'டாப் ஆர்டரில்' உதவினர். கேப்டன் எர்வின் 49 ரன் எடுத்தார். கடைசியில் சிவாங்கா (22) அவுட்டானார். ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 220 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்க அணி, இன்னிங்ஸ், 236 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்பின் 4, சேனுரன் முத்துசாமி 3 விக்கெட் சாய்த்தனர். கடந்த 20 ஆண்டில் ஜிம்பாப்வே அடைந்த மோசமான இன்னிங்ஸ் தோல்வி இது. அபராதம்ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் குன்டாய் மடிகிமு. முதல் நாளில் பந்தை எடுத்து சக வீரரிடம் எறிந்தார். மாறாக பந்து தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியஸ் மணிக்கட்டு அருகில் தாக்கியது. இது விதிமீறிய செயல் என்பதால் மடிகிமு, சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம், 1 தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி