மேலும் செய்திகள்
கோலி 16,000 ரன்கள் * சச்சினை முந்தினார்
24-Dec-2025
ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணி தொடர்ந்து நான்காவது வெற்றி பெற்றது. நேற்று கோவா அணியை 87 ரன்னில் வீழ்த்தியது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள், லீக் முறையில் நடக்கின்றன. நேற்று நான்காவது சுற்று போட்டிகள் நடந்தன. ஜெய்ப்பூரில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் மும்பை, கோவா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவா, பீல்டிங் செய்தது.சர்பராஸ் விளாசல்மும்பை அணிக்கு ஜெய்ஸ்வால் (46), ரகுவன்ஷி (11) ஜோடி துவக்கம் தந்தது. முஷீர் கான் 60 ரன் எடுத்தார். இவரது சகோதரர் சர்பராஸ் கான் 75 பந்தில் 157 ரன் குவித்தார். மும்பை அணி 50 ஓவரில் 444/8 ரன் குவித்தது. கோவா அணிக்கு சச்சின் மகன் அர்ஜுன் (24), காஷ்யப் (21) ஜோடி துவக்கம் தந்தது. லலித் யாதவ் (64), அபினவ் (100) சதம் அடித்த போதும், 50 ஓவரில் 357/9 ரன் மட்டும் எடுத்தது. மும்பை 87 ரன்னில் வெற்றி பெற்றது.தேவ்தத் சதம்கர்நாடகம், புதுச்சேரி அணிகள் மோதிய போட்டி ஆமதாபாத்தில் ('ஏ') நடந்தது. கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் (132), தேவ்தத் படிக்கல் (113) சதம் அடித்து உதவினர். இது இத்தொடரில் படிக்கல் அடித்த மூன்றாவது சதம் ஆனது. கர்நாடக அணி 50 ஓவரில் 363/4 ரன் குவித்தது. புதுச்சேரி அணி 50 ஓவரில் 296/10 ரன் மட்டும் எடுத்து, 67 ரன்னில் வீழ்ந்தது.டில்லி தோல்வி'டி' பிரிவு போட்டியில் டில்லி, ஒடிசா அணிகள் மோதின. ஒடிசா அணி 50 ஓவரில் 272/8 ரன் எடுத்தது. டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் (24) உள்ளிட்டோர் கைவிட, 42.3 ஓவரில் 193 ரன்னில் ஆல் அவுட்டாகி, 79 ரன்னில் தோற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் (ஆமதாபாத்), ராஜஸ்தான் (343/7) இலக்கை துரத்திய கேரள அணி (348/8) 2 விக்கெட்டில் வெற்றி பெற்றது.ருதுராஜ் அபாரம்ஜெய்ப்பூரில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருதுராஜ் (124), சத்யஜீத் (56), ராமகிருஷ்ணா (47) உதவ, 50 ஓவரில் 331/7 ரன் குவித்தது. உத்தரகாண்ட் அணியின் சன்ஸ்கர் (56) தவிர மற்றவர்கள் ஏமாற்ற, 43.4 ஓவரில் 202 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. மகாராஷ்டிரா அணி 129 ரன்னில் வெற்றி பெற்றது.தமிழகம் ஏமாற்றம்ஆமதாபாத்தில் நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழக அணிக்கு ஆதிஷ் (33), பிரதோஷ் (49), பாபா இந்திரஜித் (48) சற்று கைகொடுத்தனர். முகமது அலி (26), சோனு (31) உதவ, 45 ஓவரில் தமிழக அணி 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜார்க்கண்ட் அணிக்கு ஷிகர் மோகன் (90), உத்கர்ஷ் (123) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 41 ஓவரில் 244/1 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது அதிகம்மும்பை அணி நேற்று 444/8 ரன் குவித்தது. 'லிஸ்ட் ஏ' அரங்கில் இது மும்பை அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆனது. முன்னதாக 2021ல் புதுச்சேரி அணிக்கு எதிராக மும்பை அணி 457 ரன் குவித்தது, முதலிடத்தில் உள்ளது.
24-Dec-2025