வெஸ்ட் இண்டீஸ் தோல்வி * 89 ரன்னுக்கு சுருண்டது
தம்புலா: இலங்கை சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 2 வது போட்டி நேற்று தம்புலாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது.இலங்கை அணிக்கு பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ் (26) ஜோடி துவக்கம் தந்தது. குசல் பெரேரா (16) ஏமாற்ற, பதும் நிசங்கா, 54 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து கைகொடுத்தார். இலங்கை அணி 20 ஓவரில் 162/5 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்னுக்கு சுருண்டு, 73 ரன்னில் தோற்றது. தொடர் 1-1 என சமனில் உள்ளது. இலங்கையின் வெல்லாலகே, அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.