உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பயிற்சியில் இந்திய அணியினர் * நாளை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் துவக்கம்

பயிற்சியில் இந்திய அணியினர் * நாளை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் துவக்கம்

ஆமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சாதிக்க இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் நாளை துவங்குகிறது. ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் ஆன அதே வேகத்தில், டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் காம்பிர் உள்ளிட்ட இந்திய அணியினர் ஆமதாபாத் வந்து சேர்ந்தனர். நேற்று உலகின் பெரிய மோடி மைதானத்தில் பயிற்சியை துவங்கினர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா சுமார் 45 நிமிடம் பவுலிங் செய்தனர். துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில், கீப்பர் துருவ் ஜுரல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜடேஜா உள்ளிட்டோர், சிறப்பாக செயல்பட்டனர்.இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள், 'த்ரோ டவுன்' ஸ்பெஷலிஸ்ட் வீசிய பந்துகளில், இந்திய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் அணி கேப்டனாக களமிறங்க உள்ள சுப்மன் கில் மட்டும் திணறினார். கூடுதல் பேட்டர்இந்திய அணியில் 'டாப்-4' இடம் உறுதியானது. 5வது பேட்டராக நிதிஷ் குமார் அல்லது தேவ்தத் படிக்கல் என இருவரில் ஒருவர் இடம் பெறலாம். ஆஸ்திரேலிய ஏ போட்டியில் படிக்கல் 150 ரன் விளாசினார். இருப்பினும், நிதிஷ், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக அணிக்கு பயன்படுவார் என்பதால், இவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அட்டவணைதேதி போட்டி இடம்அக். 2-6 முதல் டெஸ்ட் ஆமதாபாத்அக். 10-14 2வது டெஸ்ட் டில்லி* போட்டி காலை 9:30 மணிக்கு துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை