உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாதிப்பாரா சாய் சுதர்சன் * என்ன சொல்கிறார் டஸ்காட்டே

சாதிப்பாரா சாய் சுதர்சன் * என்ன சொல்கிறார் டஸ்காட்டே

புதுடில்லி: ''இந்திய அணி பேட்டிங் வரிசையில், 3வது இடத்துக்கு பலர் காத்திருப்பது சாய் சுதர்சனுக்கு தெரியும். இதற்கேற்ப, தன் திறமை மீது நம்பிக்கை வைத்து சாதிக்க முயற்சிக்க வேண்டும்,'' என டென் டஸ்காட்டே தெரிவித்துள்ளார்.இந்திய அணி வீரர் சாய் சுதர்சன் 23. தமிழகத்தை சேர்ந்த இவர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுக வாய்ப்பு பெற்றார். இதுவரை 4 போட்டியில் ஒரு அரைசதம் மட்டும் அடித்த இவர், 147 ரன் (7 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.இதனால், சாய் சுதர்சனின் மூன்றாவது இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை டில்லியில் துவங்கும் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.இதுகுறித்து இந்திய அணி துணைப் பயிற்சியாளர் டென் டென் டஸ்காட்டே கூறியது:சாய் சுதர்சனுக்கு கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணி நிர்வாகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் உள்ளது. இதை அவரும் உணர்ந்துள்ளார். விரைவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நாங்கள் நம்புகிறோம்.அதேநேரம், 'டாப்-4' இடத்துக்கு பல சிறந்த வீரர்கள் போட்டியிடுகின்றனர். சுப்மன், 4வது இடத்திற்கு பொருத்தமாக உள்ளார். நன்கு விளையாடுவார் என்பதால் தான், மூன்றாவது இடத்தை சாய் சுதர்சனுக்கு கொடுத்திருக்கிறோம்.இங்கிலாந்து தொடருக்குப் பின் கருண் நாயர் என்ன ஆனார் என அவருக்குத் தெரியும். டெஸ்ட் அணியில் தனது நிலை என்ன என்பதை சாய் சுதர்சன் உணர்ந்துள்ளார். இதுபோன்ற சூழல் அணியில் இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும்.இதை சமாளிக்க முடியவில்லை என்றால், இந்திய அணியில் நீண்ட ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடியாது. தன் திறமை மீது நம்பிக்கை வைத்து சாதிக்க முயற்சிக்க வேண்டும். ரிஷாப் பன்ட் காயத்தில் இருந்து மீண்டு வரும் பட்சத்தில், முதல் டெஸ்டில் சதம் விளாசிய துருவ் ஜுரெல் பேட்டிங்கில் முந்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுதான் இயல்புடஸ்காட்டே கூறுகையில்,'' இங்கிலாந்து தொடருக்குப் பின் அடுத்த டெஸ்டுக்கு சாய் சுதர்சன் 6 வாரம் காத்திருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின், தென் ஆப்ரிக்க தொடருக்கு மூன்றரை வாரம் காத்திருக்க வேண்டும். இதனால், உங்களை தயார்படுத்திக் கொண்டு சிறப்பாக மீண்டு வர, இடையில் எவ்வித போட்டியும் இல்லை. ஆனால் இப்போதுள்ள நிலையில் இது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் இயல்பு. தனக்கான வழியை அவர் தான் கண்டறிய வேண்டும்,'' என்றார்.தேவ்தத் வாய்ப்புசாய் சுதர்சன் அடுத்தடுத்து ஏமாற்றுவதால், டில்லியில் நாளை துவங்கும் இரண்டாவது டெஸ்டில் இடம் பெறமாட்டார் எனத் தெரிகிறது. இவருக்குப் பதில் இந்திய 'ஏ' அணிக்காக ஜொலித்த, தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு தர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.பேட்டிங்கிற்கு சாதகம்டில்லி ஆடுகளம் வழக்கமாக துவக்கத்தில் பேட்டர்கள், பின் சுழலுக்கு கைகொடுக்கும். இம்முறை புதிய ஆடுகளம் தயாராகி உள்ளது. இதில் பேட்டர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ