உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கிரீவ்ஸ் இரட்டை சதம் * டிரா செய்தது வெஸ்ட் இண்டீஸ்

கிரீவ்ஸ் இரட்டை சதம் * டிரா செய்தது வெஸ்ட் இண்டீஸ்

கிறைஸ்ட்சர்ச்: கிரீவ்ஸ் இரட்டை சதம் கைகொடுக்க, முதல் டெஸ்ட் போட்டியை 'டிரா' செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 231, வெஸ்ட் இண்டீஸ் 167 ரன் எடுத்தன. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 466/8 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. 531 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 4வது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 212/4 ரன் எடுத்து, 319 ரன் பின்தங்கி இருந்தது. ஹோப் (116), கிரீவ்ஸ் (55) அவுட்டாகாமல் இருந்தனர். கிரீவ்ஸ் அபாரம்நேற்று ஐந்தாவது கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஹோப் 140 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 277/6 என திணறியது. பின், கிரீவ்ஸ், கீமர் ரோச் இணைந்தனர். ரோச் டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் (86 போட்டி) எட்டினார். மறுபக்கம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீவ்ஸ், டெஸ்டில் முதன் முறையாக இரட்டை சதம் (12 போட்டி) கடந்தார். 68.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த கிரீவ்ஸ் (202 ரன், 388 பந்து), ரோச் (58 ரன், 233 பந்து) ஜோடி, கடைசி வரை அவுட்டாகாமல், 180 ரன் (409 பந்து) சேர்த்தது. வேறு வழியில்லாத நிலையில் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. 388 பந்துநான்காவது இன்னிங்சில் அதிக பந்து (388) எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் கிரீவ்ஸ்.* 4வது இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த 4வது வெஸ்ட் இண்டீஸ், 7வது சர்வதேச பேட்டர் ஆனார் கிரீவ்ஸ். * நியூசிலாந்து மண்ணில் 4வது இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த முதல் எதிரணி வீரர் ஆனார். 123 பந்து, 8 ரன் வெஸ்ட் இண்டீசின் ரோச் (233 பந்து, 58 ரன்), 110 பந்தில் அரைசதம் எட்டினார். பின் 128 பந்தில் 53 ரன் எடுத்த இவர், அடுத்த 73 வது பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்தார். கடைசியாக எதிர்கொண்ட 123 பந்தில் 8 ரன் மட்டும் எடுத்து, 'டிரா' ஆக உதவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை