உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தீப்தி சர்மா நம்பர்-2

தீப்தி சர்மா நம்பர்-2

துபாய்: ஐ.சி.சி., பவுலர் தரவரிசையில் 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார் தீப்தி சர்மா. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பெண்கள் 'டி-20' கிரிக்கெட்டில் அசத்தியவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (718 புள்ளி) ஒரு இடம் முன்னேறி, 'நம்பர்-2' இடத்தை பாகிஸ்தானின் சடியா இக்பாலுடன் (718) பகிர்ந்து கொண்டார். இங்கிலாந்தின் சோபி (777) முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய பவுலர் ரேணுகா சிங் (701) 10வது இடத்துக்கு முன்னேறினார். பேட்டர்கள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 713 புள்ளியுடன் 4வது இடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (766) புதிய 'நம்பர்-1' வீராங்கனை ஆனார். தஹ்லியா (762, ஆஸி.,), இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஜெமிமா (615) 13வதாக உள்ளார். ஒரு இடம் முன்னேறிய ஷபாலி (601) 16, ஹர்மன்பிரீத் கவுர் (595) 17வது இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி