உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

* மும்பையில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரன் சிங், திக்விஜய் பிரதாப் சிங் மோதினர். இதில் கரன் சிங் 7–5, 3–1 என முன்னிலையில் இருந்த போது, காயத்தால் திக்விஜய் பாதியில் விலகினார். இதனையடுத்து கரன் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சாம்பியன் ஆனார். இது, நடப்பு ஆண்டில் கரன் சிங் 23, கைப்பற்றிய 4வது பட்டம். * சீனாவின் நிங்போ நகரில், சர்வதேச பளுதுாக்குதல் கூட்டமைப்பின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் வரும் 2029ல், சீனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரை நடத்திட குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் இத்தொடர் இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. * கத்தார் தலைநகர் தோஹாவில், வரும் நவ. 19ல் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் துவங்குகிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, தனது முதல் போட்டியில் நேபாளத்தை (நவ. 20) சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் ‘ஏ’ (நவ. 22), யு.ஏ.இ., (நவ.24) அணிகளுடன் விளையாடுகிறது. * ஓமனில், வரும் நவ. 5–14ல் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயது) தொடர் நடக்கவுள்ளது. இதில், நவ. 8ல் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. * சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில், தமிழகம், ரயில்வேஸ் அணிகள் விளையாடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி