உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மழையால் ஆட்டம் ரத்து

மழையால் ஆட்டம் ரத்து

கான்பெரா: பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. அடிலெய்டில் வரும் டிச. 6-10ல், இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக ('பிங்க்பால்') நடக்க உள்ளது.இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன், இரண்டு நாள் பகலிரவு பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.இப்போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் துவங்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.இரண்டாவது நாள் ஆட்டம், 50 ஓவர் கொண்ட போட்டியாக நடக்க உள்ளது. இது, முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா, துவக்க வீரர் சுப்மன் கில்லுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

பிரதமர் வருகை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், பயிற்சி போட்டியை காண கான்பெராவில் உள்ள மானுகா ஓவல் மைதானத்திற்கு நேரில் வந்தார். பிரதமர் லெவன் அணி வீரர்களுக்கு இப்போட்டிக்கான தொப்பியை வழங்கினார். கனமழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானதால், கேப்டன் ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் உரையாடினார். பின், இரு அணியினருடன் 'குரூப்' போட்டோ எடுத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ