உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா-ஆஸி., டெஸ்ட் மோதல் * 5 போட்டிகளாக மாற்றம்

இந்தியா-ஆஸி., டெஸ்ட் மோதல் * 5 போட்டிகளாக மாற்றம்

புதுடில்லி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடர் ஐந்து போட்டி கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 1996 முதல் 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. கடந்த 2003-04 முதல் இத்தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டன.கடைசியாக நடந்த நான்கு தொடரிலும் இந்தியா கோப்பை வென்றது. தற்போது வரும் 2024-25 தொடர் ஐந்து டெஸ்ட் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,' 1991-92க்குப் பின் முதன் முறையாக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து டெஸ்ட் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும்,' என தெரிவித்துள்ளது.இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் ஜெய் ஷா கூறுகையில்,'' டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில், 'பார்டர்-கவாஸ்கர்' தொடரின் போட்டி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை