உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவை வென்றது யு.ஏ.இ.,: ஹாங்காங் சிக்சஸ் லீக் போட்டியில்

இந்தியாவை வென்றது யு.ஏ.இ.,: ஹாங்காங் சிக்சஸ் லீக் போட்டியில்

ஹாங்காங்: 'ஹாங்காங் சிக்சஸ்' லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் யு.ஏ.இ., அணியிடம் தோல்வியடைந்தது.ஹாங்காங்கில், சர்வதேச சிக்சஸ் கிரிக்கெட் (6 ஓவர்) தொடர் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. 'சி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா, 'டாஸ்' வென்று 'பீல்டிங்' தேர்வு செய்தது.யு.ஏ.இ., அணிக்கு காலித் ஷா (42), ஜாகூர் கான் (37*) கைகொடுக்க, 6 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 130 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட் வீழ்த்தினார்.சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பாரத் சிப்லி (20) நல்ல துவக்கம் கொடுத்தார். மனோஜ் திவாரி (10) ஏமாற்றினார். கேப்டன் ராபின் உத்தப்பா 10 பந்தில் 43 ரன் (5 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டன. ஆசிப் கான் பந்துவீசினார். இந்த ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 30 ரன் எடுத்த ஸ்டூவர்ட் பின்னி (44), கடைசி பந்தில் 'ரன்-அவுட்' ஆனார்.இந்திய அணி 6 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்து, அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, காலிறுதி வாய்ப்பை இழந்தது.

6 பந்தில்... 6 சிக்சர்

ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடம் பிடித்த அணிகளுக்கு இடையே 'பவுல் லீக்' போட்டி நடத்தப்படுகிறது. இதன் முதலிரண்டு போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இதில் இந்தியாவின் ராபின் உத்தப்பா வீசிய ஒரே ஓவரில், இங்கிலாந்தின் ரவி போபரா 6 சிக்சர் பறக்கவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை