உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய வீரர்கள் பயிற்சி: முதல் டெஸ்ட் போட்டிக்கு

இந்திய வீரர்கள் பயிற்சி: முதல் டெஸ்ட் போட்டிக்கு

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக, இந்திய வீரர்கள் லண்டனில் பயிற்சி மேற்கொண்டனர்.இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஜூன் 20ல், லீட்சில் முதல் டெஸ்ட் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2--6), லார்ட்ஸ் (ஜூலை 10--14), மான்செஸ்டர் (ஜூலை 23--27), ஓவலில் (ஜூலை 31 -- ஆக. 4) நடக்கவுள்ளன.இதற்காக, புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து லண்டன் சென்றனர். முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராக நேற்று, லண்டனில் பயிற்சியை துவக்கினர். வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங், கேப்டன் சுப்மன் கில், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் தலைமை பயிற்சியாளர் காம்பிர் முன்னிலையில் பயிற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை