உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா இமாலய வெற்றி * 295 ரன் வித்தியாசத்தில் ஆஸி.,யை வீழ்த்தியது

இந்தியா இமாலய வெற்றி * 295 ரன் வித்தியாசத்தில் ஆஸி.,யை வீழ்த்தியது

பெர்த்: முதல் டெஸ்டில் அசத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 150, ஆஸ்திரேலியா 104 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 487/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. 534 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 12/3 ரன் எடுத்து திணறியது.சிராஜ் நம்பிக்கைநேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. 'வேகத்தில்' மிரட்டிய சிராஜ், முதலில் கவாஜாவை (4) வெளியேற்றினார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித்தை 17 ரன்னில் அவுட்டாக்கினார். பின் டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் இணைந்தனர். இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். டெஸ்டில் 17வது அரைசதம் கடந்தார் ஹெட். ஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 82 ரன் சேர்த்த போது, பும்ரா பந்தில் ஹெட் (89) அவுட்டானார். மிட்சல் மார்ஷ் 47 ரன் எடுத்தார். வாஷிங்டன் 'இரண்டு'வாஷிங்டன் சுந்தர் வலையில் ஸ்டார்க் (12), லியான் (0) சிக்கினர். கடைசியில் ஹர்ஷித் ராணா 'வேகத்தில்' அலெக்ஸ் கேரி (36) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 238 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பும்ரா 3, சிராஜ் 3, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் சாய்த்தனர். கேப்டன் பும்ரா (5+3= 8 விக்.,) ஆட்டநாயகன் விருதை வென்றார். 'பிங்க்' பால்இரண்டாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 6--10ல் அடிலெய்டில் நடக்க உள்ளது. இந்த டெஸ்டில் பிங்க் பந்து பயன்படுத்தப்படும். மீண்டும் முதலிடம்பெர்த் வெற்றியை தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) பட்டியலில் இந்திய அணி 61.11 சதவீத புள்ளியுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா (57.69), இலங்கை (55.56), நியூசிலாந்து (54.44) அணிகள் அடுத்த 3 இடத்தில் உள்ளன.'மெகா' வெற்றிபெர்த் டெஸ்டில் 295 ரன்னில் வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ரன் அடிப்படையில் இமாலய வெற்றியை நேற்று பதிவு செய்தது. முன்னதாக 1977 மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி, 222 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. * ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் இரண்டாவது சிறந்த வெற்றி ஆனது. 2008ல் மொகாலியில் 320 ரன்னில் இந்தியா வென்றிருந்தது. * ஆசியாவுக்கு வெளியே இந்தியாவின் இரண்டாவது சிறந்த வெற்றி இது. வெஸ்ட் இண்டீசில் 318 ரன்னில் (2019) வென்றது முதலிடத்தில் உள்ளது.* அன்னியமண்ணில் மூன்றாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது இந்தியா. வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டு (318 ரன், 2019), இலங்கையின் காலே (304, 2017) டெஸ்டில் சாதித்தது முதல் இரு இடத்தில் உள்ளன.சரியான பதிலடிஆஸ்திரேலிய மண்ணில் கடந்த இரு தொடரின் (2018-19ல் இந்தியா வெற்றி, 2020-21ல் ஆஸி., வெற்றி) முதல் டெஸ்ட், பேட்டிங்கிற்கு சாதகமான அடிலெய்டில் நடந்தது. இம்முறை இந்தியாவின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான பெர்த்தில் முதல் டெஸ்ட் நடந்தது. இந்திய வேகங்கள் மிரட்ட, ஆப்டஸ் மைதானத்தில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா இங்கு முதல் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது தோல்விசொந்த மண்ணில் கடந்த 40 ஆண்டில், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தோல்வி இது. 2012ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 309 ரன்னில் தோற்றது முதலிடத்தில் உள்ளது.மூன்றாவது அசத்தல்அன்னியமண்ணில் முதல் இன்னிங்சில் 150 அல்லது அதற்கும் குறைவான ஸ்கோர் எடுத்த டெஸ்டில் இந்தியா, முதன் முறையாக வென்றது. * முன்னதாக சொந்தமண்ணில் இந்தியா 104 (2004, ஆஸி., வான்கடே), 145 ரன் (2021, இங்கிலாந்து, ஆமதாபாத்) எடுத்த டெஸ்டில் வெற்றி பெற்றது.ஐந்தாவது முறைடெஸ்டில் இரு இன்னிங்சில் 100 ரன்னுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்து, 8 அல்லது அதற்கும் மேல் என இந்தியாவின் பும்ரா விக்கெட் வீழ்த்திய நிகழ்வு, 5வது முறையாக நடந்தது. பெர்த்தில் இவர், 72 ரன் கொடுத்து, 8 விக்கெட் சாய்த்தார். 7 முறை இதுபோல அசத்திய அஷ்வின் முதலிடத்தில் உள்ளார். 0கடந்த 1970 முதல், ஆஸ்திரேலிய அணி சொந்தமண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 9வது முறையாக நேற்று தோற்றது. இதில் ஒன்றில் கூட தொடரை வென்றது இல்லை. சபாஷ் கேப்டன்கபில் தேவ் (10 விக்.,/135 ரன், எதிர்-வெ.இண்டீஸ், 1983), பிஷன் சிங் பேடிக்கு (10/194, ஆஸி., 1977, 9/70, நியூசி., 1976) அடுத்து டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட மூன்றாவது கேப்டன் ஆனார் பும்ரா (8/72).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ