உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சூப்பர் கேப்டன் சூர்யா * வாஷிங்டன் சுந்தர் பாராட்டு

சூப்பர் கேப்டன் சூர்யா * வாஷிங்டன் சுந்தர் பாராட்டு

பல்லேகெலே: ''கடைசி நேரத்தில் ரிங்கு சிங்கை பவுலிங் செய்ய அழைத்தது, நெருக்கடியான நேரத்தில் 'ரிஸ்க்' எடுத்து பந்துவீசி வியக்கத்தக்க வகையில் செயல்பட்டார் கேப்டன் சூர்யகுமார்,'' என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. இந்திய அணி புதிய கேப்டன் சூர்யகுமார், புதிய பயிற்சியாளர் காம்பிர் தலைமையில் களமிறங்கியது. முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி பல்லேகெலேயில் நடந்தது.இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. இலங்கை அணி 18 ஓவரில் 129/4 ரன் எடுத்திருந்தது. 12 பந்தில் 9 ரன் தேவைப்பட்டன. இந்நிலையில் 19 வது ஓவரை வீச, ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் சூர்யகுமார். இதில் 3 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் சாய்த்து திருப்பம் தந்தார் ரிங்கு சிங்.கடைசி ஓவரில் 6 ரன் தேவை என்ற நிலையில், 'ரிஸ்க்' எடுத்த சூர்யகுமார், தானே பந்து வீசினார். இதில் 5 ரன் கொடுத்து, 2 விக்கெட் சாய்க்க, போட்டி 'டை' ஆனது. கடைசியில் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது.இதுகுறித்து இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறியது:சூர்யகுமார் கேப்டன்ஷிப் திறமை உண்மையில் வியக்கத்தக்கது. ஏனெனில் இலங்கை வெற்றிக்கு 12 பந்தில் 9 ரன் தேவை என்ற நிலையில், குசல் பெரேரா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இருப்பினும் ரிங்கு சிங்கை பந்து வீச அழைத்தார். அடுத்து கடைசி ஓவரிலும் 'ரிஸ்க்' எடுத்த சூர்யகுமார், தானே பந்து வீசி, இந்தியாவுக்கு வெற்றி கொண்டு வந்தார்.இதற்கெல்லாம் துணிச்சலாக இதயம் வேண்டும். இந்த வெற்றிக்கு உரிய முழு பாராட்டும் அவருக்குத் தான் கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.காம்பிர் 'அட்வைஸ்'பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''பேட்டிங்கில் மட்டுமன்றி, கேப்டனாகவும் நன்றாக செயல்பட்டார் சூர்யகுமார். எளிதில் விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை போராடினால் வெற்றி உறுதி என நம்பலாம். அதேநேரம் பந்துகள் அதிகமாக திருப்பம் ஏற்படும் ஆடுகளங்களில் இந்திய பேட்டர்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். இல்லையென்றால் இக்கட்டான நேரத்தில் சிக்கல் ஏற்பட்டு விடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்