உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தொடரை வெல்ல இந்தியா ரெடி * இன்று நான்காவது டி-20 சவால்

தொடரை வெல்ல இந்தியா ரெடி * இன்று நான்காவது டி-20 சவால்

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே மோதும் நான்காவது 'டி-20' இன்று நடக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இன்று நான்காவது போட்டி ஹராரேயில் நடக்கிறது.கேப்டன் சுப்மன் கில் (99 ரன்), அபிஷேக் சர்மா (110), ருதுராஜ் (133), சிறப்பான பேட்டிங்கை தருகின்றனர். மூன்றாவது போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் (36) தன் பங்கிற்கு விளாசுகிறார்.விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபேவுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இவர்கள் தங்களை நிரூபிக்க முயற்சிக்கலாம்.வாஷிங்டன் நம்பிக்கைபந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரின் எழுச்சி (6 விக்.,), வரும் இலங்கை தொடரில் ஜடேஜாவின் இடத்தை பெற உதவலாம். இவருடன் பிஷனோய் (6) நம்பிக்கை தருகிறார். வேகத்தில் அவேஷ் கான் (6) கைகொடுக்கிறார். கலீல் அகமது (2 போட்டி, 1 விக்.,) மட்டும் திணறுகிறார். இன்று இவருக்குப் பதில் முகேஷ் குமார் (4) சேர்க்கப்படலாம்.மீண்டு வருமாஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் வென்ற பிறகு, அடுத்தடுத்து வெற்றிக்கு போராடவில்லை. பேட்டிங்கில் தியன் மையர்ஸ், பவுலிங்கில் முஜரபானி என இருவர் மட்டும் மிரட்டுகின்றனர். வெஸ்லே, மருமானி என 'டாப் ஆர்டர்' பேட்டர்கள் கைகொடுக்க வேண்டும். கேப்டன் சிக்கந்தர் ராஜா தடுமாறுவது பலவீனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை