உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / எட்டாத சென்னைக்கு எட்டாவது தோல்வி * பிளே ஆப் வாய்ப்பை இழந்தது

எட்டாத சென்னைக்கு எட்டாவது தோல்வி * பிளே ஆப் வாய்ப்பை இழந்தது

சென்னை: பிரிமியர் தொடரில் எட்டாவது தோல்வி அடைந்தது சென்னை அணி. 4 விக்கெட்டில் தோற்ற சென்னை, இனி 'பிளே ஆப்' சுற்றை எட்ட முடியாது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை அணி, பஞ்சாப்பை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், பீல்டிங் தேர்வு செய்தார். துவக்கம் ஏமாற்றம்சென்னை அணிக்கு இளம் வீரர்கள் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஜோடி துவக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் வீசிய இரண்டாவது ஓவரின் 2, 4வது பந்தில் ரஷீத் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, நம்பிக்கை ஏற்பட்டது. இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. 5வது பந்தில் ரஷீத் (11) அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், யான்சென் பந்தில் அவுட்டானார் ஆயுஷ் (7). கர்ரான் அபாரம்பின் சாம் கர்ரான், ஜடேஜா இணைந்தனர். வழக்கம் போல 'பவர்பிளே' ஓவர்களில் ஒன்றும், இரண்டுமாக ரன் எடுத்து, வாய்ப்பை வீணடித்தனர். ஹர்பிரீத் பிரார் வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஜடேஜா (17 ரன், 12 பந்து), 5வது பந்தில் அவுட்டாகி திரும்பினார். சென்னை அணி 6 ஓவரில் 48/3 ரன் மட்டும் எடுத்தது. அடுத்து கர்ரானுடன் இணைந்தார் பிரவிஸ். ஹர்பிரீத் பந்தில் சிக்சர் அடித்த கர்ரான், சஹால் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் சஹால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பிரவிஸ், ஓமர்சாய் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 4வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது, ஓமர்சாய் பந்தில் பிரவிஸ் (32) போல்டானார். கர்ரான் 30 பந்தில் அரைசதம் எட்டினார். போட்டியின் 16 வது ஓவரை வீசினார் சுயான்ஷ். இதன் முதல் இரு பந்தில் சிக்சர் அடித்த கர்ரான், அடுத்து இரண்டு பவுண்டரி விளாச, மொத்தம் 26 ரன் எடுக்கப்பட்டன.தோனி ஏமாற்றம்யான்சென் பந்தில் சிக்சர் அடித்த கர்ரான் (88 ரன், 47 பந்து, ஸ்டிரைக் ரேட் 187.23), அவரிடமே சிக்கினார். வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்தார் தோனி. 19வது ஓவரை வீசினார் சஹால். முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி (11), அடுத்த பந்தில் அவுட்டானார். 4, 5 வது பந்தில் தீபக் ஹூடா (2), கம்போஜ் (0) அவுட்டாகினர். 6வது பந்தில் நுார் அகமது (0) அவுட்டாக, 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினார் சஹால். கடைசியில் துபே (6) அவுட்டாக, 19.2 ஓவரில் 190 ரன்னில் ஆல் அவுட்டானது. ஷ்ரேயஸ் கலக்கல்பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (23), பிரப்சிம்ரன் ஜோடி துவக்கம் கொடுத்தது. வேகமாக ரன் சேர்த்த பிரப்சிம்ரன் 31 பந்தில் அரைசதம் அடித்தார். நுார் அகமது பந்தில் பிரப்சிம்ரன் கொடுத்த 'கேட்ச்சை' நழுவவிட்டார் பதிரானா. இருப்பினும் 54 ரன்னில் அவுட்டானார் பிரப்சிம்ரன். கர்ரான் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஷ்ரேயஸ், 32 பந்தில் அரைசதம் எட்டினார். வதேராவை (5) பதிரானா அவுட்டாக்கினார். பஞ்சாப் வெற்றிக்கு 24 பந்தில் 41 ரன் தேவைப்பட்டன. போட்டியின் 17வது ஓவரை வீசினார் பதிரானா. இதில், ஷ்ரேயஸ், 2 சிக்சர், பவுண்டரி என விளாச, 20 ரன் எடுக்கப்பட்டன. சென்னை தோல்வியும் உறுதியானது. அடுத்த சில நிமிடத்தில் ஷசாங்க் (23), ஷ்ரேயஸ் (72) அவுட்டான போதும், பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 194/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சொந்தமண்ணில் வெற்றியை எட்டாத சென்னை, தொடர்ந்து 5வது தோல்வியடைந்தது. 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்து வெளியேறியது.11 பந்து, 6 விக்கெட்சென்னை அணி ஒரு கட்டத்தில் 17.3 ஓவரில் 172/4 ரன் என வலுவாக இருந்தது. எப்படியும் 200 முதல் 210 ரன் எடுக்கும் என நம்பப்பட்டது. மாறாக அடுத்த 11 பந்தில் 18 ரன் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்தது. 190 ரன்னில் ஆல் அவுட்டானது, தோல்விக்கு காரணம் எனலாம்.எனக்குத் தெரியாதுநேற்று 'டாஸ்' நிகழ்வு நடந்தது. அப்போது தோனியிடம் பேசிய வர்ணனையாளர் டேனி மோரிசன்,'வரவேற்பை பார்த்தீர்களா, அப்படி என்றால், அடுத்த ஆண்டும் நீங்கள் விளையாடுவீர்களா,' என கேட்டார்.இதற்கு பதில் தந்த தோனி,' இப்போதுள்ள சூழலில், அடுத்த போட்டியில் பங்கேற்பேனா, இல்லையா என்று கூட எனக்குத் தெரியாது,' என சிரித்துக் கொண்டே 'காமெடி' செய்தார்.21 ரன்பிரிமியர் தொடரின் நடப்பு சீசனில் சென்னை அணி தனது சொந்தமண்ணில் நேற்று 6வது போட்டியில் பங்கேற்றது. இதில் ஒரு முறை கூட முதல் விக்கெட் 'பார்ட்னர்ஷிப்பில்' 50 ரன்னுக்கும் மேல் எடுக்கப்படவில்லை. அதிகபட்சம் கோல்கட்டாவுக்கு எதிராக 46 ரன் எடுக்கப்பட்டன. நேற்று 21 ரன் தான் எடுத்தது. 'பவர் பிளே' ஏமாற்றம்சென்னை அணி இதுவரை பங்கேற்ற 10 போட்டியின் 'பவர் பிளே' ஓவர்களில் (முதல் 6) 6 முறை 50 ரன்னுக்கும் கீழ் எடுத்தது. நேற்று 48/3 ரன் மட்டும் எடுத்தது. சென்னை அணியின் சராசரி ரன் ரேட் (7.91), மற்ற அணிகளை விட குறைவாக உள்ளது. அதிக ரன்நேற்று சுயான்ஷ் வீசிய ஓவரில் 26 ரன் எடுக்கப்பட்டன. நடப்பு பிரிமியர் தொடரின் ஒரு ஓவரில் சென்னை அணி எடுத்த அதிகபட்ச ரன் இது. முன்னதாக மும்பை வீரர் அஷ்வனி குமார் ஓவரில் 24 ரன் எடுக்கப்பட்டு இருந்தது.சஹால் 'ஹாட்ரிக்'பிரிமியர் லீக் அரங்கில் யுவேந்திர சஹால், 2வது முறையாக 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார். இதற்கு முன் 2022ல் ராஜஸ்தானுக்காக விளையாடிய இவர், மும்பையில் நடந்த கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனை படைத்திருந்தார்.* இது, பிரிமியர் லீக் வரலாற்றில் பதிவான 23வது 'ஹாட்ரிக்' ஆனது. அமித் மிஸ்ரா (2008, 2011, 2013) அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் (2009ல் 2), சஹால் (2022, 2025) தலா 2, பாலாஜி (2008), நிடினி (2008), ரோஹித் சர்மா (2009), பிரவீண் குமார் (2010), அஜித் சண்டிலா (2012), சுனில் நரைன் (2013), பிரவீன் தாம்பே (2014), ஷேன் வாட்சன் (2014), அக்சர் படேல் (2016), சாமுவேல் பத்ரீ (2017), ஆன்ட்ரூ டை (2017), ஜெயதேவ் உனத்கட் (2017), ஷ்ரேயஸ் கோபால் (2019), சாம் கரான் (2019), ஹர்ஷல் படேல் (2021), ரஷித் கான் (2023) தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M. PALANIAPPAN, KERALA
மே 02, 2025 10:47

இந்த முறை சென்னை அணி விளையாட்டு மிகவும் மோசம். ஒப்பனிங் பார்ட்னெர்ஷிப் 50 ரன் ஒருமுறை கூட தொடவில்லை Conway, Rachin Ravindra, Ruthuraj இருந்தும் கிளிக் ஆகவில்லை. மிடில் ஆர்டர் வீரர்களும் வேஸ்ட். மகேந்திர சிங் தோனிக்கும் ஏஜ் ஆகிவிட்டது. பிளே ஆப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை "Best Wishes in Next Time"


Mohamed Rafeek
மே 01, 2025 14:21

வெரி குட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை