மேலும் செய்திகள்
டில்லி அணி சாம்பியன்: புரோ கபடி லீக் தொடரில்
31-Oct-2025
சென்னை: சென்னை அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறலாம். இந்திய அணி சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா 36. பிரிமியர் தொடரில் 2008-09ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். பின் மும்பை அணியில் இணைய நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற காரணத்திற்காக 2010ல் 'சஸ்பெண்ட்' ஆனார். 2011ல் கொச்சி அணிக்கு சென்றார். 2012 முதல் சென்னை அணிக்காக விளையாடுகிறார்.இதுவரை 254 போட்டியில் 3260 ரன், 170 விக்கெட் சாய்த்துள்ளார். கடந்த 2023 சீசனில் சென்னை அணி கோப்பை வெல்ல கைகொடுத்தார். 2025ல் ரூ. 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட இவர், 301 ரன், 10 விக்கெட் வீழ்த்தினார். இதனிடையே ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை, டில்லி அணிக்கு கொடுத்து விட்டு, இளம் வீரர் சமீர் ரிஸ்வியை வாங்க முயற்சித்தது. இதற்கு டில்லி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்க, தற்போது, சென்னை அணியுடன் பேசுவதாக தெரிகிறது. சாம்சனுக்குப் பதில், ஜடேஜா, சாம் கர்ரானை ராஜஸ்தான் அணி கேட்டு வருவதாக செய்தி வெளியாகின. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம். வரும் சீசனில் சாம்சன் சென்னை அணிக்காக களமிறங்கலாம். சென்னை அணி முன்னாள் வீரர் ரெய்னா கூறுகையில்,'' சென்னை அணிக்காக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியவர் ஜடேஜா. இவரை அணியில் தக்க வைக்க வேண்டும். ருதுராஜ் கேப்டனாக தொடரலாம். கான்வே, தீபக் ஹூடா கழற்றி விடப்படலாம்,'' என்றார்.
31-Oct-2025