கோலி நம்பர்-2: ஐ.சி.சி., தரவரிசையில்
துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் கோலி, 2வது இடத்துக்கு முன்னேறினார்.ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோலி, 773 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் என 302 ரன் (சராசரி 151.00, 'ஸ்டிரைக் ரேட்' 117.05) குவித்த கோலி 37, தொடர் நாயகன் விருது வென்றார்.இத்தொடரில் 2 அரைசதம் உட்பட 146 ரன் விளாசிய மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 38, முதலிடத்தில் (781 புள்ளி) நீடிக்கிறார். இந்தியாவின் சுப்மன் கில் (723) 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். லோகேஷ் ராகுல் (649) 12வது இடத்துக்கு முன்னேறினார்.ல்தீப் 'நம்பர்-3': பவுலர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (655 புள்ளி), 6வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (710), இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் (670) தொடர்கின்றனர்.'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் அக்சர் படேல் (215) 10வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா உமர்சாய் (334) உள்ளார்.