மேலும் செய்திகள்
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி
04-Jun-2026
லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டின் 3ம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது.இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 140, நியூசிலாந்து 113 ரன் எடுத்தன. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 226 ரன் எடுத்தது. பின், 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, 2ம் நாள் முடிவில் 36/3 ரன் எடுத்திருந்தது. கான்வே (12) அவுட்டாகாமல் இருந்தார்.மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக துவங்கியது. ராபின்சன் 'வேகத்தில்' ரச்சின் ரவிந்திரா (8), டேரில் மிட்சல் (0) வெளியேறினர். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 55/5 ரன் எடுத்து, 199 ரன் பின்தங்கி இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், 3ம் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. கான்வே (19), பிளன்டெல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன், ராபின்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
04-Jun-2026