உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / முகமது ஆமிர் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து

முகமது ஆமிர் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து

கராச்சி: பாகிஸ்தானின் முகமது ஆமிர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் 32. கடந்த 2009ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர், 2010ல் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபனமானது. இதனையடுத்து ஐ.சி.சி., சார்பில் இவருக்கு 5 ஆண்டு காலம் (2010-2015), தடை விதிக்கப்பட்டது. தவிர சிறையில் அடைக்கப்பட்ட இவர், பின்னர் விடுதலையானார்.மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பிய ஆமிர், 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான பைனலில் 3 விக்கெட் கைப்பற்றி பாகிஸ்தான் அணி கோப்பை வெல்ல உதவினார். பின், 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்பதற்காக முகமது ஆமிர், தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார். இத்தொடரில் விளையாடிய 4 போட்டியில், 7 விக்கெட் கைப்பற்றினார். உலக கோப்பை தொடருக்கு பின், ஆமிருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவரை 36 டெஸ்ட் (119 விக்கெட்), 61 ஒருநாள் (81), 62 சர்வதேச 'டி-20' (71) போட்டிகளில் விளையாடி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை