உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவிடம் வீழ்ந்தது ஓமன்: ஜூனியர் ஆசிய கோப்பையில்

இந்தியாவிடம் வீழ்ந்தது ஓமன்: ஜூனியர் ஆசிய கோப்பையில்

மஸ்கட்: இந்தியா 'ஏ' அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.ஓமனில், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20') 6வது சீசன் நடக்கிறது. 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ', ஓமன் அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஓமன் அணிக்கு முகமது நதீம் (41), ஹம்மத் மிர்சா (28*), வாசிம் அலி (24) கைகொடுத்தனர். ஓமன் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்தது.சுலப இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு அனுஜ் ரவாத் (8) ஏமாற்றினார். அபிஷேக் சர்மா (34) நம்பிக்கை தந்தார். பின் இணைந்த கேப்டன் திலக் வர்மா, ஆயுஷ் படோனி ஜோடி கைகொடுத்தது. அபாரமாக ஆடிய படோனி, 25 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த போது படோனி (51) அவுட்டானார். நேஹல் வதேரா (1) ஏமாற்றினார்.ஜதீந்தர் சிங் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராமன்தீப் சிங் வெற்றியை உறுதி செய்தார். இந்தியா 'ஏ' அணி 15.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா (36), ராமன்தீப் சிங் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.முதலிரண்டு போட்டியில் பாகிஸ்தான், யு.ஏ.இ., அணிகளை வீழ்த்திய இந்தியா 'ஏ' அணி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'பி' பிரிவில் முதலிடத்தை தட்டிச் சென்றது. பாகிஸ்தான் அணி (4 புள்ளி) அரையிறுதிக்கு தகுதி பெற்றது.அரையிறுதியில் (அக். 25) இந்தியா 'ஏ' - ஆப்கானிஸ்தான் 'ஏ', இலங்கை 'ஏ' - பாகிஸ்தான் ஷகீன்ஸ் அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை