வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Indian semers good perform pannamtm win pana mudym
ஜோகனஸ்பர்க்: இந்தியாவுக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணியில் ரபாடாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நவ. 8ல் டர்பனில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் போர்ட் எலிசபெத் (நவ. 10), செஞ்சுரியன் (நவ. 13), ஜோகனஸ்பர்க்கில் (நவ. 15) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 16 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது.தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. சீனியர் வீரர்களான ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், கேஷவ் மஹாராஜ் 'டி-20' அணிக்கு திரும்பினர். கேப்டனாக மார்க்ரம் தொடர்கிறார்.தென் ஆப்ரிக்க அணி: மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மன், ஜெரால்டு கோட்சீ, டோனோவன் பெரேரா, ரீசா ஹென்டிரிக்ஸ், மார்கோ ஜான்சன், கிளாசன், டேவிட் மில்லர், கேஷவ் மஹாராஜ், பாட்ரிக் க்ரூகர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மிஹ்லாலி போங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கிள்டன், அன்டில் சிமெலேன், லுாதோ சிபம்லா.
Indian semers good perform pannamtm win pana mudym