உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ராஜஸ்தான் அணி கனவு தகர்ந்தது: பைனல் வாய்ப்பை இழந்தது

ராஜஸ்தான் அணி கனவு தகர்ந்தது: பைனல் வாய்ப்பை இழந்தது

சென்னை: தகுதிச் சுற்று-2ல் ஏமாற்றிய ராஜஸ்தான் அணி 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறியது.சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தகுதிச் சுற்று-2ல் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பவுல்ட் அசத்தல்

ஐதராபாத் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பவுல்ட் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா (12) அவுட்டானார். அஷ்வின் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ராகுல் திரிபதி (37), பவுல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மிரட்டிய பவுல்ட் 'வேகத்தில்' மார்க்ரம் (1) வெளியேறினார். டிராவிஸ் ஹெட் (34) ஆறுதல் தந்தார். அவேஷ் கான் வீசிய 14வது ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டி (5), அப்துல் சமத் (0) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய கிளாசன் (50) அரைசதம் விளாசினார். ஷாபாஸ் அகமது (18) சோபிக்கவில்லை. உனத்கட் (5) 'ரன்-அவுட்' ஆனார்.ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்தது. கேப்டன் கம்மின்ஸ் (5) அவுட்டாகாமல் இருந்தார்.

ஜெய்ஸ்வால் நம்பிக்கை

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு டாம் கோலர்-காட்மோர் (10) சுமாரான துவக்கம் தந்தார். புவனேஷ்வர் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விரட்டிய ஜெய்ஸ்வால் (42) நம்பிக்கை தந்தார். கேப்டன் சாம்சன் (10) நிலைக்கவில்லை. ஷாபாஸ் அகமது வீசிய 12வது ஓவரில் ரியான் பராக் (6), அஷ்வின் (0) அவுட்டாகினர். அபிஷேக் 'சுழலில்' ஹெட்மயர் (4) போல்டானார். நடராஜன் 'வேகத்தில்' பாவெல் (6) வெளியேறினார்.கம்மின்ஸ் பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த துருவ் ஜூரெல், 26 பந்தில் அரைசதம் எட்டினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜூரெல் (56) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் அணி பைனலுக்குள் நுழைந்தது.

கோல்கட்டாவுடன் மோதல்

நாளை சென்னையில் நடக்கவுள்ள பைனலில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்