உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாய் சுதர்சன் இரட்டை சதம்: ரஞ்சி கோப்பையில் கலக்கல்

சாய் சுதர்சன் இரட்டை சதம்: ரஞ்சி கோப்பையில் கலக்கல்

புதுடில்லி: டில்லிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் சாய் சுதர்சன் இரட்டை சதம் விளாசினார்.டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 'டி' பிரிவு ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகம், டில்லி அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஹிம்மத் சிங் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.தமிழக அணிக்கு சாய் சுதர்சன், கேப்டன் நாராயண் ஜெகதீசன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஜெகதீசன் அரைசதம் கடந்தார். நவ்தீப் சைனி 'வேகத்தில்' ஜெகதீசன் (65) வெளியேறினார். சாய் சுதர்சன், முதல் தர போட்டியில் முதன்முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 379 ரன் எடுத்திருந்தது. சுதர்சன் (202 ரன், 23 பவுண்டரி, ஒரு சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் (96) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை