மேலும் செய்திகள்
தென் ஆப்ரிக்கா அபாரம்: இலங்கை அணி தடுமாற்றம்
08-Dec-2024
அனுஷம் | வாக்கு கொடுத்தா ஆப்பு உறுதி
17-Dec-2024
கேப்டவுன்: இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.தென் ஆப்ரிக்கா சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 615, பாகிஸ்தான் 194 ('பாலோ-ஆன்') ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 213/1 ரன் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஷான் மசூது (145) நம்பிக்கை தந்தார். முகமது ரிஸ்வான் (41), சல்மான் ஆகா (48) ஓரளவு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 478 ரன் எடுத்து, 57 ரன் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா, மகாராஜ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.சுலப இலக்கை (58 ரன்) விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு பெடிங்காம் (44*), மார்க்ரம் (14*) கைகொடுத்தனர். 2வது இன்னிங்சில் 58/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
08-Dec-2024
17-Dec-2024