உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை: முதல் ஒருநாள் போட்டியில்

நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை: முதல் ஒருநாள் போட்டியில்

வெலிங்டன்: முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வெலிங்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.இலங்கை அணிக்கு அவிஷ்கா (56), ஜனித் (36), வணிந்து ஹசரங்கா (35) கைகொடுக்க 43.4 ஓவரில் 178 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் (90*), ரச்சின் ரவிந்திரா (45), மார்க் சாப்மேன் (29*) நம்பிக்கை அளித்தனர். நியூசிலாந்து அணி 26.2 ஓவரில் 180 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை