மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
2 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
நார்த் சவுண்டு: 'டி-20' உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 19 பந்தில், ஓமனை வீழ்த்தியது.நார்த் சவுண்டு மைதானத்தில் (வெ.இண்டீஸ்) நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, ஓமன் மோதின. இதில் இமாலய வெற்றி பெற்றால் 'சூப்பர்-8' சுற்று வாய்ப்பை தக்கவைக்கலாம் என்ற நிலையில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து, பீல்டிங் செய்தது.ரஷித் அபாரம்ஓமன் அணி பேட்டர்கள் 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து பவுலர்களை சமாளிக்க முடியாமல் வருவதும், போவதுமாக இருந்தனர். பிரதிக் (5), கேப்டன் அகுய்ப் (8), ஆர்ச்சர் 'வேகத்தில்' வீழ்ந்தனர். காஷ்யப் 9 ரன்னில், மார்க் உட் பந்தில் அவுட்டானார். சோயப் கான் மட்டும் அதிகபட்சம் 11 ரன் எடுத்தார். மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. ஓமன் அணி 13.2 ஓவரில் 47 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்தின் அடில் ரஷித் 4, ஆர்ச்சர் 3, மார்க் உட் 3 விக்கெட் சாய்த்தனர். பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியை பில் சால்ட் (12), வில் ஜாக்ஸ் (5) ஏமாற்றினர். பட்லர் (24*), பெர்ஸ்டோவ் (8*) விளாசல் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 19 பந்தில் (3.1 ஓவர்) 50/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 101'டி-20' உலக கோப்பை வரலாற்றில் அதிகபந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்ற அணி என சாதித்தது இங்கிலாந்து. நேற்று 101 பந்து மீதமுள்ள நிலையில் ஓமனை வென்றது. இலங்கை அணி (90 பந்து, எதிர்-நெதர்லாந்து, 2014) இரண்டாவதாக உள்ளது.நீடிக்கும் வாய்ப்பு'பி' பிரிவில் ஆஸ்திரேலியா (6) 'சூப்பர்-8' சுற்றுக்கு சென்றுவிட்டது. நமீபியா (2), ஓமன் (0) அணிகள் வெளியேறின. ஸ்காட்லாந்து (5, ரன்ரேட் 2.164)), இங்கிலாந்து (3, 3.081) அணிகள் 2, 3வது இடத்தில் உள்ளன. * கடைசி போட்டியில் இன்று இங்கிலாந்து-நமீபியா, ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து (ஜூன் 16) மோத உள்ளன. * இதில் ஸ்காட்லாந்து வென்றால் 7 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இங்கிலாந்து வெளியேறும்.* மாறாக ஸ்காட்லாந்து தோற்று, இங்கிலாந்து வென்றால் இரு அணிகளும் தலா 5 புள்ளி பெறும். அதிக ரன் ரேட் உள்ள இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு செல்லும்.
2 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1