உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தமிழகம் இரண்டாவது வெற்றி: ரஞ்சி கோப்பை தொடரில்

தமிழகம் இரண்டாவது வெற்றி: ரஞ்சி கோப்பை தொடரில்

சென்னை: ரஞ்சி கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது தமிழக அணி. ரயில்வேஸ் அணியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. ரஞ்சி கோப்பை முதல்தர கிரிக்கெட் 92வது சீசன் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ரயில்வேஸ் 184, தமிழக அணி 165 ரன் எடுத்தன. 19 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ரயில்வேஸ் அணி, இரண்டாவது நாள் முடிவில் 107/9 ரன் எடுத்து, 126 ரன் முன்னிலை பெற்றிருந்தது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அஜித் ராம் பந்தில் ஹிமான்சு (2) அவுட்டானார். ரயில்வேஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 108 ரன்னுக்கு சுருண்டது. தமிழகத்தின் சார்பில் சாய் கிஷோர் 4, ஜெகநாதன் 3, அஜித் ராம் 2 விக்கெட் வீழ்த்தினர்.

சித்தார்த் அரைசதம்

பின் 128 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது தமிழக அணி. ஆதிஷ் (21), ஜெகதீசன் (12) ஜோடி சுமார் துவக்கம் தர, சோனு (2) ஏமாற்றினார். தமிழக அணி 39/3 என திணறியது. பாபா இந்திரஜித் (23), ஆன்ட்ரே சித்தார்த் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரதோஷ் (1) கைவிட்டார். மறுபக்கம் சித்தார்த் அரைசதம் அடிக்க, தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 130/5 ரன் எடுத்து, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. சித்தார்த் (56), விமல் குமார் (10) அவுட்டாகாமல் இருந்தனர். 3 போட்டியில் 2 வெற்றி, 1 ‘டிரா’ செய்த தமிழக அணி, 14 புள்ளியுடன் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை