தமிழக அணி தடுமாற்றம்: புச்சி பாபு அரையிறுதியில்
நத்தம்: புச்சி பாபு அரையிறுதியில் டி.என்.சி.ஏ., லெவன் அணி 194 ரன்னுக்கு சுருண்டது.தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் அரையிறுதியின் முதல் இன்னிங்சில் சத்தீஸ்கர் அணி 467 ரன் எடுத்தது. டி.என்.சி.ஏ., லெவன் அணி சார்பில் லக்சய் ஜெயின் 5, அஜித் ராம் 4 விக்கெட் வீழ்த்தினர். பின் முதல் இன்னிங்சை துவக்கிய டி.என்.சி.ஏ., லெவன் அணி 194 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அஜிதேஷ் (39), பூபதி குமார் (33), நிதிஷ் ராஜகோபால் (34) ஆறுதல் தந்தனர். சத்தீஸ்கர் அணி சார்பில் ககன்தீப் சிங் 4, ஷசாங்க் திவாரி, முகமது இர்பான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.ரித்திக் சதம்: திருநெல்வேலியில் நடந்த மற்றொரு அரையிறுதியின் முதல் இன்னிங்சில் ஐதராபாத் அணி 313 ரன் எடுத்தது. ரித்திக் ஈஸ்வரன் (100), விமல் குமார் (75), மாதவ பிரசாத் (40) கைகொடுக்க டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஐதராபாத் சார்பில் தனய் தியாகராஜன் 7 விக்கெட் வீழ்த்தினார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஐதராபாத் அணிக்கு ரோகித் ராயுடு (61) கைகொடுக்க, ஆட்டநேர முடிவில் 227/7 ரன் எடுத்திருந்தது. டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி சார்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.