உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தமிழக அணி வெற்றி: கூச் பெஹார் டிராபியில்

தமிழக அணி வெற்றி: கூச் பெஹார் டிராபியில்

தேனி: கூச் பெஹார் டிராபி லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி 195 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி 'சி' பிரிவு லீக் போட்டியில் (நான்கு நாள்) தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 220, சத்தீஸ்கர் 101 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் 118/6 ரன் எடுத்திருந்தது. கிரண் (61) அவுட்டாகாமல் இருந்தார்.நான்காம் நாள் ஆட்டத்தில் கிரண் கார்த்திகேயன் (62), பிரவீன் (53*) கைகொடுக்க தமிழக அணி 2வது இன்னிங்சில் 224 ரன் எடுத்தது. பின் 344 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சத்தீஸ்கர் அணி 2வது இன்னிங்சில் 148 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கேப்டன் விகல்ப் திவாரி (71) ஆறுதல் தந்தார். தமிழகம் சார்பில் ஹேம்சுதேஷன் 5, கிஷோர் 3 விக்கெட் சாய்த்தனர். தமிழக அணிக்கு 6 புள்ளி வழங்கப்பட்டது. 'சுழலில்' அசத்திய தமிழகத்தின் ஹேம்சுதேஷன், இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை