உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / திலக் வர்மா நம்பர்-2: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

திலக் வர்மா நம்பர்-2: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 832 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். இவர், இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த 2வது 'டி-20' போட்டியில் அரைசதம் (72*) விளாசினார்.இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (763 புள்ளி) 4வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (855) தொடர்கிறார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சர்மா, 59 இடம் முன்னேறி 40வது இடத்தை கைப்பற்றினார்.வருண் 'நம்பர்-5': பவுலர்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி, 679 புள்ளிகளுடன் 25வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்துக்கு எதிராக 'சுழலில்' அசத்தி வரும் வருண், 3 போட்டியில், 10 விக்கெட் சாய்த்துள்ளார். இதில் ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில், 5 விக்கெட் வீழ்த்தினார்.மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் (645) 16வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் அடில் ரஷித் (718) முதலிடத்தை கைப்பற்றினார்.'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (255) முதிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பும்ரா 'நம்பர்-1'

டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (908) முதலிடத்தில் தொடர்கிறார். 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (400), 'நம்பர்-1' வீரராக நீடிக்கிறார். பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் (847), 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ