உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 90 பந்தில் 190 ரன் விளாசிய வைபவ்

90 பந்தில் 190 ரன் விளாசிய வைபவ்

பெங்களூரு: இங்கிலாந்து செல்லும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணி, 5 'யூத்' ஒருநாள், 2 'யூத்' டெஸ்டில் பங்கேற்கிறது. ஹோவில் உள்ள கவுன்டி மைதானத்தில் ஜூன் 27ல் இத்தொடர் துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். சமீபத்திய பிரிமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் அணிக்காக அசத்திய இவர், 35 பந்தில் (எதிர்-குஜராத்) அதிவேக சதம் விளாசினார். 7 போட்டியில் 252 ரன் குவித்தார்.இதனிடையே இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாம், பெங்களூரு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடக்கிறது. இதில் வீரர்களுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடந்தது. பேட்டிங்கில் மிரட்டிய வைபவ், 90 பந்தில் 190 ரன் குவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை