உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: இங்கிலாந்தை வீழ்த்தியது

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: இங்கிலாந்தை வீழ்த்தியது

ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (18), வில் ஜாக்ஸ் (19), ஜோர்டான் காக்ஸ் (17) ஏமாற்றினர். கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் (48), சாம் கர்ரான் (37) ஓரளவு கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோதி 4 விக்கெட் சாய்த்தார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவரில், 81/0 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின், 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றிக்கு 35 ஓவரில் 157 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்த போது பிரண்டன் கிங் (30) அவுட்டானார். அபாரமாக ஆடிய எவின் லீவிஸ் 69 பந்தில், 94 ரன் (8 சிக்சர், 5 பவுண்டரி) விளாசினார்.வெஸ்ட் இண்டீஸ் அணி 25.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கீசி கார்டி (19), கேப்டன் ஷாய் ஹோப் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்ட நாயகன் விருதை குடகேஷ் மோதி (வெஸ்ட் இண்டீஸ்) வென்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி ஆன்டிகுவாவில் இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி