மேலும் செய்திகள்
ரன் மழையா... சுழல் புயலா * இரண்டாவது டெஸ்ட் ஆடுகளம் எப்படி
19 hour(s) ago
வங்கதேச அணி ஆதிக்கம்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம்
19 hour(s) ago
துபாய்: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு மாற்றப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வங்கதேசத்தில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் வரும் அக்., 3--20ல் நடக்கஇருந்தது. மொத்தம் 10 அணிகள், 18 நாள், 23 போட்டிகள் போட்டிகள், தாகா, ஷில்ஹெட் என இரு மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தன.இதனிடையே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக, ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரை வேறு இடத்துக்கு மாற்ற ஐ.சி.சி., முயற்சித்தது.இந்தியா, ஆஸ்திரேலியா மறுப்பு தெரிவித்தன. தற்போது இத்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு மாற்றப்பட்டது. இங்குள்ள துபாய், சார்ஜாவில் போட்டி நடக்க உள்ளன.ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஜெப் அலார்டிஸ் கூறுகையில்,'' வங்கதேச கிரிக்கெட் போர்டு, பெண்களுக்கான உலக கோப்பை தொடரை மறக்க முடியாத நிகழ்வாக, நடத்தி இருக்கலாம். இதற்காக முயற்சி எடுத்த போதும், பல்வேறு அணிகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் வேண்டாம் என மறுத்தனர்,'' என்றார்.
19 hour(s) ago
19 hour(s) ago