ஆஸி., பெண்கள் அபாரம் * உலக கோப்பையில் 6வது வெற்றி
இந்துார்: உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி ஆறாவது வெற்றி பெற்றது. நேற்று தென் ஆப்ரிக்காவை 7 விக்கெட்டில் வீழ்த்தியது. மத்திய பிரதேசத்தின் இந்துாரில் நேற்று நடந்த பெண்களுக்கான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் செய்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா, தஸ்மின் ஜோடி துவக்கம் தந்தது. லாரா 31 ரன்னில் அவுட்டாகி, விக்கெட் சரிவை துவக்கி வைத்தார். அடுத்து தஸ்மின் (6), சுனே லஸ் (6), அன்னெரியே (5), காப் (0) ஏமாற்றினர். சினாலோ 29 ரன் எடுத்தார். மற்றவர்கள் கைவிட, தென் ஆப்ரிக்க அணி 24 ஓவரில் 97 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியாவின் சுழல் வீராங்கனை அலானா கிங், 7 விக்கெட் சாய்த்தார்.பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு போபே (5), ஜார்ஜியா ஜோடி துவக்கம் தந்தது. எல்லிஸ் பெர்ரி 'டக்' அவுட்டானார். பெத் மூனே 42 ரன் எடுக்க வெற்றி எளிதானது. ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 98/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இத்தொடரில் ஆஸ்திரேலியா பெற்ற ஆறாவது வெற்றி இது. அரையிறுதியில் யார் யார்லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடம் பெற்ற ஆஸ்திரேலியா (13), தென் ஆப்ரிக்கா (12), இங்கிலாந்து (9), இந்தியா (6) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில், மோதும் அணிகள் விவரம்: தேதி அரையிறுதி இடம்அக், 29 முதல் இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா கவுகாத்திஅக். 30 2வது இந்தியா-ஆஸ்திரேலியா நவி மும்பை* போட்டி மதியம் 3:00 மணிக்கு துவங்கும்