வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இளம் இந்திய வீரர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
பிரிஸ்பேன்: முதலாவது 'யூத்' ஒருநாள் போட்டியில் (19 வயது) அசத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.ஆஸ்திரேலியா சென்றுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'யூத்' ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் முதல் போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் டர்னர் (0), சைமன் பட்ஜ் (0) ஏமாற்றினர். கேப்டன் வில் மலாஜ்சுக் (17) நிலைக்கவில்லை. யாஷ் தேஷ்முக் 'டக்-அவுட்' ஆனார். ஸ்டீவன் ஹோகன் (39), டாம் ஹோகன் (41) ஓரளவு கைகொடுத்தனர். ஆர்யன் சர்மா (10) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜான் ஜேம்ஸ் (77*) அரைசதம் கடந்தார்.ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ஹெனில் படேல் 3, கிஷான் குமார், கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.இரண்டு அரைசதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மத்ரே (6), விஹான் மல்ஹோத்ரா (9) ஏமாற்றினர். வைபவ் சூர்யவன்ஷி (38) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய வேதாந்த் திரிவேதி (61*), அபிக்யான் (87*) ஜோடி அரைசதம் கடந்து வெற்றிக்கு உதவியது. இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை அபிக்யான் வென்றார்.
இளம் இந்திய வீரர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்