உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: இந்தியா அபாரம் * மங்கோலியாவை வென்றது

கால்பந்து: இந்தியா அபாரம் * மங்கோலியாவை வென்றது

வியன்டியன்: ஆசிய கால்பந்து அணிகள் (20 வயதுக்குட்பட்ட) பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் 2025ல் சீனாவில் (பிப். 6-23) நடக்கவுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் சிலியில் 2025ல் நடக்கவுள்ள 'பிபா' உலக கோப்பை (20 வயது) கால்பந்து தொடரில் பங்கேற்கலாம்.இதற்கான தகுதிச்சுற்றில் 45 அணிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி, 'ஜி' பிரிவில் ஈரான், மங்கோலியா, லாவோசுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய 20 வது நிமிடத்தில் இந்திய வீரர் கெல்வின் சிங், முதல் கோல் அடித்தார். 45 வது நிமிடம் மங்கோலிய தரப்பில் தெமுலன் ஒரு கோல் அடித்து உதவினார். முதல் பாதியில் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. கிப்கென் அபாரம்இரண்டாவது பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 54 வது நிமிடத்தில் இந்தியாவின் கிப்கென், பந்தை இடது காலால் உதைத்து கோலாக மாற்றினார். அடுத்த 2 வது நிமிடத்தில் மீண்டும் மிரட்டிய கிப்கென், மற்றொரு கோல் அடிக்க, இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது. போட்டியின் 87 வது நிமிடத்தில் இந்தியாவின் கோரு, தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை