ஈஸ்ட் பெங்கால் வெற்றி * பெண்கள் கால்பந்தில்...
உஹான்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து குரூப் ஸ்டேஜில் முதல் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் பெண்கள் அணி. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பெண்கள் கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 2 வது சீசனின் முதற்கட்ட ஸ்டேஜில் இந்தியா சார்பில் ஈஸ்ட் பெங்கால் அணி பங்கேற்றது. இதில் 'இ' பிரிவில் இடம் பெற்ற ஈஸ்ட் பெங்கால், 2 போட்டியில் தலா ஒரு வெற்றி, ஒரு 'டிரா' செய்து, முதலிடம் (4 புள்ளி) பிடித்தது. குரூப் ஸ்டேஜிற்கு முன்னேறிய முதல் இந்திய அணி என சாதனை படைத்தது. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்ற ஈஸ்ட் பெங்கால், நேற்று தனது முதல் போட்டியில் ஈரானின் பம் கதுன் அணியை சந்தித்தது. சீனாவின் உஹான் நகரில் நடந்த இப்போட்டியில், ஈஸ்ட் பெங்கால் அணிக்கு ஷில்கி தேவி (4வது நிமிடம்), இக்வாபுத் (32), நான்ஜிரி (87) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. வரும் 20ல் ஈஸ்ட் பெங்கால் அணி, சீனாவின் உஹான் ஜியாங்டா அணியை சந்திக்க உள்ளது.